- கவிதை மழை அ.நவஜோதி அருண்
வருக மழையே!
வருக மழையே!
நீ வருவதிலேதும்
பிழையில்லையே..!
நேரடியாய்
அலைகடலில்
கலக்காது...!
விலைமதிப்பிலா..
வானின்
உயிர் நீரைத்தா..!

பேய்மழையாய்
வேண்டாம்!
மக்கள்வெள்ளம்
அலைமோதும்..!
என்சென்னை
மக்கள்
புன்னகை பூக்கும்
அளவு போதும்.. !
மேகவெடிப்பு
வேண்டாம்...!
தேகம்பிளக்க
வேண்டாம்.. !
செல்ல இடியுடன்
வா..!
மெல்லக் கொடியசைத்து
வரவேற்கிறேன்..!
உருவத்தில்
மாறிவிடாதே..!
பருவமழையில்
பொய்த்துவிடாதே!
துளியாய்த்
தொடங்கி,
தலையில்
இறங்கி...
தரைத்தொட்டுப்
போ..!
சாளரத்தில்
விழுந்து,
சாலையில்
கடந்து,
சங்கடங்கள்
கலைந்து.. போ!
நாங்கள்
புன்னகை
பூக்க... வா!
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)
சூடினேன் பிறை சூடியை
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
படிக்கப்படாத என் கடிதம்!
The Secret Stranger
{{comments.comment}}