சென்னை : முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த பயணங்கள் குறித்த விபரங்கள் எதிர்க்கட்சி தரப்பை பரபரப்பாக்க ஆரம்பித்துள்ளது.
முதல்வரின் பயணத்திட்டங்கள் என்னவோ அரசு திட்டங்கள், விழாக்கள் சார்ந்தது என கூறப்பட்டாலும் உண்மையில் அதற்கு பின்னால் மிகப் பெரிய அரசியல் பிளான் உள்ளது. இது தான் எதிர்க்கட்சிகளை கலங்க வைத்துள்ளது. காரணம் முதல்வர் விஜய் ஒரு ஊருக்குப் போனாலே அங்கு பெரும் கூட்டம் திரண்டு விடுவதுதான். மேலும் அவர் ரோடுஷோ போனாலே போதும், பெரிய அளவில் மக்களை ஈர்த்து விடுகிறார் என்பதும் எதிர்க்கட்சிகளின் கலக்கத்திற்கு இன்னொரு காரணம்.
முதலில் புதுக்கோட்டை - பிறகு ஈரோடு
முதல்வர் விஜய் நவம்பர் 02ம் தேதியன்று புதிய பேருந்து நிலைய திறப்பு, உள் விளையாட்டு அரங்கு திறப்பு என பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக புதுக்கோட்டை செல்ல உள்ளார். அதே போல் நவம்பர் முதல் வாரத்தில் அவர் ஈரோடு செல்ல உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அம்பாசமுத்திரத்திற்கும் ஒரு விசிட்

இந்த சமயத்தில் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய் அம்பாசமுத்திரத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துமே அரசு விழாக்கள் தானே, இதில் என்ன அரசியல் உள்ளது? நல்ல திட்டங்களை துவக்கி வைக்க முதல்வர் செல்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது என மேலோட்டமாக இந்த பயணத் திட்டத்தை பார்ப்பவர்களுக்கு தோன்றலாம்.
ஆனால் கவனித்து பார்த்தால் இதில் தவெக.,வின் பக்கா அரசியல் பிளான் உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதி இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளிப் போகலாம் என தேர்தல் கமிஷனே சொல்லி விட்டது. ஆனால் அதற்குள் முதல் ஆளாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா, அவருக்கு திமுக, அதிமுக கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே தவெக "பிரச்சார" வேலைகளில் இறங்கி விட்டது என்பதையே முதல்வரின் பயண பிளான் காட்டுகிறது.
இடைத் தேர்தல் தொகுதிகள்

முதல்வர் விஜய் பயணம் செய்யப் போகும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் விராலிமலை தொகுதி உள்ளது. அதே போல் ஈரோடு மாவட்டத்தில் தான் பெருந்துறை தொகுதி உள்ளது. இங்கு சென்று நலத்திட்டங்களை துவக்கி வைப்பதுடன், விஜய் பேசினாலே மக்களின் ஆதரவு குவிந்து விடும் என தவெக நம்புகிறது.
அதே போல் விஜய்க்கு மிகப் பெரிய செல்வாக்கு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தான். சட்டசபை தேர்தலிலேயே குழந்தைகள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி கேட்டதால் தான் தவெக 108 இடங்களில் வென்றது என்ற பேச்சு எழுந்தது. இப்போது அம்பாசமுத்திரத்திற்கு சென்று குழந்தைகள் தினத்தை விஜய் கொண்டாடினார் என்றால் அங்குள்ள குழந்தைகளின் மனங்களை கவர்ந்து, அதன் மூலம் பெரியவர்களின் ஓட்டுக்களையும் வென்று விடுவார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான், அதிமுக மற்றும் திமுக ஆதரவுடன் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது தவெக.,விற்கு பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தல் தேதிக்கு அறிவிப்பிற்கு முன் விஜய், குழந்தைகளை கவரும் பணியில் இறங்கி விட்டதால் சீமானை எப்படியும் வெற்றி பெற வைக்கக் கூடாது என தவெக உறுதியாக உள்ளது என்பதை உணர முடிகிறது.
இடைத் தேர்தலை விஜய் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையே இந்தத் திட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் இது முதல் கட்ட பயணமாகவே இருக்கும். அடுத்தடுத்து அவர் இடைத் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
ஓரெழுத்து ஒருமொழி - கூ -தூ - சே (பா இரண்டு)
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!
"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)
இலவசம் ஏற்காதே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
விலங்குகள் பேசினால்!
{{comments.comment}}