பசும்பொன் : அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தனக்கு ஆதரவு அளித்தால் அதை ஏற்க தயாராக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது குறித்தும், அவர் பொதுவேட்பாளராகக் களம் இறங்குவார் எனப் பரவி வரும் தகவல்கள் குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இச்சூழலில், இந்த விவகாரம் குறித்து சீமான் அளித்துள்ள பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறகு, செய்தியாளர்களை சந்தித்த போது இது குறித்து சீமான் பேசி உள்ளார்.
பொதுவேட்பாளர் சர்ச்சை:

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான், பொது வேட்பாளராக நிற்பது குறித்துப் பேசப்படுகின்ற தகவல்களுக்குப் பதிலளித்த அவர், "அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக நிற்பது குறித்து நானே தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தான் ஒரு பொது வேட்பாளர் என்ற தகவலைக் கிளப்பி விடுவது தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் போட்டி உறுதி:
தான் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர் எனக் குறிப்பிட்ட சீமான், வரும் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதில் தான் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை எனத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கவில்லை என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்பேனா?
பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த சீமான், "திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என நான் எப்படிச் கூறுவேன்? பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகியவை பெருந்தன்மையுடன் தன்னை ஆதரிக்க முன்வந்தால், அந்த ஆதரவை நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதோடு, இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணி என கருத வேண்டாம் என்றும் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் களத்தில் சுவாரஸ்யம்:
எப்போதும் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளைத் தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்து வரும் சீமான், தற்போது திமுக மற்றும் அதிமுகவின் ஆதரவைப் பெறுவது குறித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவேட்பாளராக சீமானை ஆதரிப்பீர்களா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது, தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என சூசகமாக பதிலளித்து விட்டு சென்றார்.
விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
{{comments.comment}}