- பூரணவள்ளி சேகர்
கபிலன் அனைவரிடத்திலும் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்டவன். பள்ளியில் படிக்கும் கபிலனின் புத்தகப் பையை ஒரு உதவியாளர் தூக்கி வருவார். கபிலன் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் பள்ளிக்கு வருவது நடைமுறை.
பள்ளியில் ஆசிரியர்கள் கூட கபிலனிடம் அதிகம் கண்டிப்பு காட்ட மாட்டார்கள். ஆனால் கபிலன் தன் அந்தஸ்தை எல்லாம் தலைக்கேற்றாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவான்.
வீட்டிற்குத் திரும்பி வந்த பின் கபிலனுக்குத் தேவையான சிற்றுண்டி மற்றும் பழங்களை பணியாளர்கள் கொண்டு வந்து தருவார்கள். அவற்றை அனைவரிடமும் பகிர்ந்து உண்டு மகிழ்வான்.
படிப்பிலும் படு சுட்டி யாக இருந்தான் கபிலன். விலையுயர்ந்த உடைகள் அதிகமாக இருந்தது. பலவிதமான நகைகள் கபிலனை அலங்கரிக்கும். தன் அருகில் இருக்கும் அனைவருக்கும் எல்லாவற்றையும் வாரி வழங்கும் வள்ளல் போன்று கபிலன் இருந்தான்.
ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் ஒரு வயதான பெரியவர் உணவின்றி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்த கபிலன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுக்கச் சொன்னான்.

உணவு சாப்பிட்ட பிறகு அந்த முதியவர் கபிலனை வாழ்த்தினார். வாழ்த்து பெற்ற மகிழ்வான மனநிலையில் இருந்த கபிலன் மணி சத்தமும் தன் நண்பனின் குரலொலியும் கேட்டு விழித்தெழுந்தான்.
கபிலன் இருப்பது ஓர் உறவற்றவர்கள் தங்கும் விடுதியில் தான். இங்கு உணவு பிரச்சினை இல்லை. ஆயினும் உறவுப் பிரச்சினை உண்டு. தாய் தந்தை என்று யாரும் இல்லை என்ற கவலையை கபிலன் மறக்க நினைத்தான்.
அவன் உள்ளக்கதவு அவ்வப்போது திறந்து கொள்ளும். அப்போது அவன் ராஜ குடும்ப வாரிசு போல தன்னை நினைத்துக் கொள்வான்.
அதன் வெளிப்பாடுதான் கனவுலக ஆடம்பர வாழ்க்கை. கபிலனின் உண்மையான நற்குணத்தால் கனவும் ஒரு நாள் பலிக்கட்டும்
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
நமிநந்தியடிகள்... அருநம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்!
மழையே.. மழையே...வா.. வா!
சின்னச் சின்னக் குழந்தைகளே
ஓரெழுத்து ஒருமொழி (பா எண் ஒன்று)
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
{{comments.comment}}