சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.400 கோடி லஞ்ச பெற்ற வழக்கு தொடர்பாகச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வாதங்களாக எடுத்து வைத்துள்ளார்.
அன்பில் மகேஷிற்கு நவம்பர் 06ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 02ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காகச் சென்னை நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறையில் உணவின் தரம், தனது உடல்நிலை மற்றும் காவல் துறை விசாரணை குறித்து அவரும் அவரது தரப்பு வழக்கறிஞரும் முன்வைத்த வாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
"உடல் எடை குறைந்துவிட்டது":
.jpg)
நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஷ் தரப்பில், "நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் எனக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே எனக்கும் சப்பாத்தி மட்டுமே உணவாகக் கொடுக்கப்படுகிறது. அதனை என்னால் சாப்பிட முடியவில்லை; இதனால் எனது உடல் எடை கணிசமாகக் குறைந்துவிட்டது. எனவே, புழல் சிறையில் எனக்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவை வழங்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், "நான் எங்கும் ஓடி விடமாட்டேன்; காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். சிறையில் எனக்கு முறையான மருத்துவ வசதிகளும் மருந்துகளும் கூட வழங்கப்படவில்லை. சிறையில் நான் இரவில் தூங்கும் போது கூட விளக்குகளை எரியவிடுகின்றனர். மாநில நலனுக்காக நானும் எனது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்துள்ளோம். எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் தப்பிக்க முயலவில்லை. ஆனால், முத்துக்குமாரைத் தப்பிக்க வைத்ததாக என் மீது வீண் குற்றச்சாட்டு கூறுகிறார்கள்" என்று அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு விளக்கம்:
அன்பில் மகேஷ் தரப்பின் புகார்களுக்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "அன்பில் மகேஷிற்குச் சிறையில் உரிய மருத்துவ வசதிகள் அனைத்தும் முறையாகச் செய்து தரப்படும். சிறையில் அவருக்கு வீட்டு உணவு வழங்குவது குறித்து மட்டும் சட்டப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். ரூ.400 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான இந்த விசாரணை மற்றும் சிறை உணவு குறித்த அன்பில் மகேஷின் வாதங்கள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
நமிநந்தியடிகள்... அருநம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்!
{{comments.comment}}