சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு நாளை (அக்.,29) விசாரணைக்கு வர உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க அன்பில் மகேஷ், முன்ஜாமீன் மனு ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக சென்னை போலீசார், அன்பில் மகேசை கைது செய்தனர். உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேஷூக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவம்பர் 06 வரை நீதிமன்ற காவல் விதிக்குப்பட்டதால் உடனடியாக புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படார்.
புழல் சிறையில் அன்பில் மகேசுக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனக்கு கணைய அழற்சி நோய் இருப்பதால், அதற்காக மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (அக்.,29) விசாரணைக்கு வர உள்ளது.
மகேஷூக்கு ஜாமீன் கிடைக்குமா?

அன்பில் மகேஷூக்கு ஜாமீன் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது,
1. ஏற்கனவே மகேஷின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு நீதிபதி சொன்ன காரணம், இதில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலை மறைவாக உள்ளதால் மகேஷிற்கு ஜாமீன் வழங்கினால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கவும், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பது தான்.
2. முத்துக்குமார் தலைமறைவாக இருப்பது மட்டுமின்றி, இன்று அவரது முன்ஜாமீன் மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம். மகேஷூக்கும் அவரது மனைவிற்கும் லஞ்சமாக பெற்ற பணத்தை, அவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றியது முத்துக்குமார் தான் என சொல்லப்படுகிறது. அதனால் முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனு ரத்தாகி விட்டதால், மகேஷூக்கும் ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்.
3. சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு மகேஷிற்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு தான் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை ஜாமீனுக்கு பெறுவதற்கான காரணமாக மகேஷ் தரப்பில் சொல்லப்பட்டுள்ள கணைய பாதிப்பு அவருக்கு இருந்தால், அப்போதே டாக்டர்கள் கூறி இருப்பார்கள். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பார். அதனால் ஜாமீனுக்காக மகேஷ் சொல்லும் காரணத்தை நீதிமன்றம் ஏற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவே சட்டத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் நாளை விசாரணைக்கு பிறகு தான் அன்பில் மகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா என்பது தெரிய வரும். ஒருவேளை ஜாமீன் மனுவில் வேறு ஏதாவது காரணங்களை மகேஷ் தரப்பு பட்டியலிட்டு இருந்தால், அதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவும் வாய்ப்புள்ளது.
தேவர் குருபூஜை 2026 : சென்னை நந்தனத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தத் திட்டம்!
யார் அரசியலுக்கு வந்தாலும் அதுக்கு பாஜக தான் காரணமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரை கடந்தது:மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்று
அன்பில் மகேஷிற்கு ஜாமீன் கிடைக்குமா? மனு மீது நாளை விசாரணை
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி
சிறையில் அன்பில் மகேஷ்...திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார்? எல்லாம் இவர் கையில் தான் இருக்கு
காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் : 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 4,887 பேர் உயிரிழப்பு!
சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு
{{comments.comment}}