- ஜோசப் சாம்ராஜ்
வட்டாரத்தில் கலை திருவிழாவில் முதல் பரிசு வாங்கிய மூன்று மாணவர்களை (தருண்..மாரி..முனிஸ்) அழைத்து கொண்டு மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிக்காக இலஞ்சி அழைத்து செல்ல காலை 6.30க்கு அவரவர் வீட்டை நோக்கி எனது கார் சென்றது.
சொன்ன நேரத்தில் எனக்காக காத்திருந்தான் தருண். சந்தோஷம். சாப்டியா என கேட்டேன். ஆம் என்றான். அடுத்த மாணவனுக்கு பத்து நிமிடம் கால தாமதமாகவும், அதற்கடுத்த மாணவர் 15நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்ற எனது காரை நிறுத்தி காலை உணவுக்காக அழைத்து சென்று விரும்பிய உணவு பதார்த்தம் உண்டு விட்டு அருகில் உள்ள கடையில் பென்சில் வாங்க சென்றோம்.
அப்போது அவர்களது கால்களில் காலணி இல்லாதது கண்டு என் மனசு வெகுண்டு எழுந்து அவர்களுக்கு பிடித்த காலணி வாங்கிகொடுத்து.. சரியான நேரத்தில் இலஞ்சி வந்து சேர்ந்தோம். ஆம் உண்மையிலே திருவிழா மாதிரி தான் நடந்தது. பார்க்க பார்க்க குழந்தைகளின் திறமை வானம் வரை சென்றது.

வந்த கையோடு ஐந்தருவியில்ஆட்டம் போட்டனர். வெளியே வந்து அன்னாசி மற்றும் தர்பூசணி ருசி பார்த்தனர். சின்ன விளையாட்டு சாமான்கள் வாங்கி பரிசளித்தேன். மதிய உணவுக்காக சைவ உணவு ருசி பார்த்துவிட்டு அருகில் உள்ள ஊஞ்சலில் ஆசை தீர ஆடினார்கள். அவர்கள் வீட்டிற்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்து விட்டு வினா எழுப்பினேன்.
இன்றைய நாளில் உனக்கு பிடித்த நிகழ்வு என்னவென்று. மூவரும் வெவ்வேறு பதில் கூறினார். அவரவர் வீடுகளில் பொறுப்பாக ஒப்படைத்து விட்டு வரும் போது முனிஷ் மட்டுமே நன்றி என்று சொன்ன வார்த்தைகள் கேட்டு மனசு களிகூர்ந்தது.
வெற்றியோ தோல்வியோ இன்றைய நாள் அவர்கள் வாழ்வில் இது மிகப் பெரிய பொக்கிஷமான நாளாகும். இறுதியாக நான் சொன்னேன், நீங்கள் இது போல படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்றபிறகு நாலு பேருக்கு உதவியாக என்னை போலவாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.
வானத்தில் இருந்து ஆம் என்று சொல்வது மெல்லிய பன்னீர் துளிகள் என் மேல் தூவியது தேவன் தரும் ஆசிர்வாதம்...!
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
சர்தார் வல்லபாய் படேல்.. ஒற்றுமையே நம் பலமாகுமே!
வட்டாரத்தில் கலைத் திருவிழா!
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
ஓரெழுத்து ஒருமொழி - கூ -தூ - சே (பா இரண்டு)
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
Unparalleled versatile actor Chandrababu: நான் ஒரு முட்டாளுங்க!
"மனம் இரங்கி வா!-கோபம் மலை இறங்கி வா!"
நளபாகம் - ஒரு நிமிடக் கதை (49)
{{comments.comment}}