- பாரதிராஜன்
29/6/1925 ராசிபுரத்தில் பிறந்த லட்சுமிநாராயணன் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்.
மனோஹரா நாடகத்தில் மனோகரா பாத்திரத்தில் நடித்த பிறகு மனோகர் என அழைக்கப்பட்டார்.
அஞ்சல் துறையில் பணிபுரிந்த மனோகர் முதலில் நடித்த படம் ராஜாம்பாள். பட்டையை கிளப்பிய படங்களான வண்ணக்கிளி, கைதிகண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள், பட்டணத்தில் பூதம். வில்லனாக எம்ஜிஆர் படங்களில் நடித்தார். உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க, அடிமைப்பெண், காவல்காரன், இதயக்கனி.
நவாப் ராஜமாணிக்கத்திற்கு பிறகு நாடகத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிட்ட தட்ட 31 நாடகங்கள் நடித்து மொத்தமாக 7950 முறை நாடகங்களை மேடையேற்றினார். சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன், திருநாவுக்கரசர்.
நாடகத்தில் டிராமாஸ்கோப் முறையை புகுத்தியவர் இவரே. நாடகக் காவலர் பட்டம் உள்பட நிறைய விருது வாங்கியவர். இலங்கை மன்னன் ராவணனாக இலங்கேஸ்வரன் நாடகத்தில்நடித்து மேலும்புகழ் பெற்றார்.

ஆங்கில நாடகமும் Last Tango in Heaven தயாரித்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, எஸ். எஸ். ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், ரஜனி மற்றும் கமலஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
வல்லவனுக்கு வல்லவன்படத்தில் இன்ஸ் பெக்டர் வேடம் கிளைமாக்ஸில் தான் தெரியும். அதேபோல் குலமகள்ராதை படத்தில் வில்லன் என நினைப்போம் ஆனால் அவர் நல்ல ரோலில் நடித்து பட்டையை கிளப்பினார்.
இவருடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது எனக்கு. நான் காஞ்சிபுரத்தில் 1972ல் கல்லூரி மாணவனாக இருந்த போது வரதராஜர் கோயிலுக்கு வந்தார். அவரை என் நண்பன் கோயில் பற்றிய விவரங்கள் சொல்ல கூட நானும் போனேன்.
அதன்பிறகு கிருஷ்ண கான சபாவில் நாடகம் நடந்த போது பார்த்து பேசினேன். திருவல்லிக்கேணி என் கேடி பள்ளியில் நடைபெற்ற நாடகங்களில் வாலண்டியர் வேலையில் சந்தித்த ஞாபகம். பந்தா இல்லாதவர். சகஜமாக பழகும் நடிகர்.
ராஜா படத்தில் ஜெயிலில் சிவாஜியிடம் பேசும் விதம் அபாரம் அபாரம். அதேபோல் பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜி மற்றும் வி.எஸ். ராகவனுடன் போட்டிப்போட்டு நடித்திருப்பார்.
மனோகர் காலமானது 10/01/2006ல். அப்போது அவருக்கு வயது 80.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
--
அடை காக்கும் தாய்க் கோழியாய் .. ஆசானுக்கு வாழ்த்துரை!
Spiritual Tour:.. பக்தியினால் நிறைந்த மனசு.. சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (பகுதி 2)
கொக்குக் கூட்டம் – வானில் தவழும் முத்துமாலை!
தூண்!
வாழ்வாங்கு நாம் வாழ வரம் பெற்றுப் பிறந்தோமோ!
நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர்!
கடைசி பெஞ்சில் இருந்த பெண்.. ஒரு திடீர் தொடர்!
ராசாத்தி - ஒரு நிமிடக் கதை (41)
Yasmin Cooking Tips: பாசிப்பருப்பு + பச்சரிசி கிச்சடி செய்வது எப்படி?
{{comments.comment}}