- பாரதிராஜன்
கோபிசந்தா என்ற பெயருக்கு பெருமை சேர்த்த மனோரமா ஆச்சி பற்றிய கட்டுரை இது.
முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் (ஒரே ரத்தம் படம்) மற்றும் இந்நாள் முதல்வரான விஜய் (ரசிகன், தேவா) ஆகியோருடன் நடித்தவர் என்ற பெருமை உடையவர். 1500படங்களில் நடித்தவர்.
ஆரம்பத்தில் வைரம் நாடகசபா நாடகங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ஆர் மனோரமாவின் திறமை அறிந்து தன் நாடக மன்றத்தில் சேர்த்துக்கொண்டார். கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை மூலமாக திரை உலக வாழ்க்கை தொடங்கியது.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் சக்கப் போடு போட்டவர். நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி போன்றவர்களுடன் இணைந்து திரையை கலகலப்பாக்கியவர். பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்து பட்டையை கிளப்பியவர்.
தில்லானா மோகனாம்பாளில் சொல்லவே வேண்டாம். அவ்வளவு ஏன் நடிகர்திலகம் சிவாஜியே மனோரமா நடிப்பை பார்த்து பயப்படுவார். அவரே ஒரு பேட்டியில் சொன்னது. அதேமாதிரி அருணாச்சலம் படத்தில் தூள் கிளப்பி இருப்பார்.

மனோரமாவின் குரலில் இடம் பெற்ற வா வாத்தியாரே ஊட்டாண்டே படு பேமஸ். அதேபோல பிற்காலத்தில் மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் பாடலிலும் அசத்தியிருப்பார். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது சிறந்த துணை நடிகை, கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா. மறக்க முடியாத நடிகை. மாரடைப்பு காரணமாக 10/10/2015 ல் காலமானார்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
{{comments.comment}}