- பாரதிராஜன்
03/07/1918ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். சிறந்த குணச்சித்திர நடிகர், இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
சென்னை பட்டாபிராம் கலவலகண்ணன் செட்டி இந்து கல்லூரி மாணவர். மனதேசம் தெலுங்கு பட அறிமுகம். பாதாளபைரவி படத்தில் மந்திரவாதி வேடம் மூலமாக பிரபலமானார். 53 தமிழ்ப்படம், 109 தெலுங்கு படங்களில் நடித்தவர்.
2013ல் இந்திய அரசு எஸ்.வி.ரங்காராவை கெளரவப்படுத்தும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டது. 1963 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியன் திருப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
படிக்காத மேதை படம் மறக்க முடியுமா? விடிவெள்ளி, குமுதம், படித்தால் மட்டும் போதுமா, பக்த பிரகலாதா ஹிரண்யகசிபு வேடம். மாயாபஜார் கல்யாண சமையல் சாதம். செல்வம், ராஜா. அன்புசகோதரர்கள் முத்துக்கு முத்தாக படம். ராஜா படத்தில் பயங்கர வில்லனாக நடித்தது மறக்கவே முடியாது.

எங்கவீட்டுப்பிள்ளை சரோஜாதேவியின் தந்தை வேடத்தில் பின்னி எடுத்திருப்பார். சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷின் அவளுக்கென்ன பாடல் காட்சியில் இயக்குநர். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் ஜொலித்தார்.
சிவாஜி, எம்ஜிஆர், நாகேஷ் போன்ற அநேக நடிகர்களுடன் தன் தனித்தன்மையால் ஜொலித்தார். கைகொடுத்த தெய்வம் படத்தில் சாவித்திரின் தந்தை வேடம்.
எஸ்.வி. ரங்காராவ், ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். குணச்சித்திர வேடங்களுக்கு அவரைப் போன்ற ஒரு நடிகர் அதன் பிறகு கிடைக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 18/07/1974 அன்று மறைந்த எஸ்.வி. ரங்காராவ், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத ஒரு கலைஞர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
ஓடும் நதிகள் எல்லாம் உன் முகவரி தேடித்தானோ?
வேலை ஒன்று தான் ஆனால்.. வேறுபாடு!
நிலையற்ற உலகம்.. நிலைநிறுத்த முயல்கிறோம்.. ஆனால் நாம் மட்டும் எப்படி?
நீ...ண்...ட!
A man's world
எஸ்.வி.ரங்காராவ்.. படிக்காத மேதை.. மறக்க முடியுமா!
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
வடகிழக்கு பருவமழை 2026 இன்று முதல் துவக்கம்: சென்னைக்கு மழை வருமா?
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
{{comments.comment}}