கோவை: சென்னை புழல் சிறை, தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய விவகாரங்களின் பரபரப்பு அடங்குவதற்குள் கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் திடீரென தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதில் ராகவன் என்ற கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் சிறையில் அடைப்பதற்காகக் காவல்துறையினர் சிறை வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, சிறை வளாகத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி, ராகவன் திடீரென தப்பி ஓடிவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காவலர்கள் அவரைப் பிடிக்க முயன்றும், அவர் மின்னல் வேகத்தில் அப்பகுதியிலிருந்து தப்பி மறைந்துவிட்டார்.

சிறை வளாகத்திலிருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவம் குறித்து தகவலறிந்த கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைதி ராகவனைப் பிடிப்பதற்காகக் கோவை மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், தப்பி ஓடிய கைதியின் புகைப்படத்தை வெளியிட்டு, அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
4 போலீஸார் சஸ்பெண்ட்:
இந்த சம்பவம் தொடர்பாக கவனக்குறைவாக இருந்ததாக கூறி கைதிக்குப் பாதுகாப்பாக வந்த நான்கு போலீஸார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதிநவீன பாதுகாப்பும், பலத்த காவல் கண்காணிப்பும் நிறைந்துள்ள கோவை மத்திய சிறை வளாகத்தின் நுழைவாயில் பகுதியிலேயே கைதி தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது. தப்பி ஓடிய கைதி ராகவனை விரைந்து பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை புழல் சிறையில் இருந்து 2 பேரும், தேனி சிறையில் இருந்து 17 பேரும் தப்பி ஓடினர். பிறகு அவர்களை கண்டுபிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சென்னை புழல் சிறை காவலர்கள் 5 பேரும், தேனி சிறை காவலர்கள் 9 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை சிறை வளாகத்திலிருந்து கைதி தப்பி ஓடி உள்ளார்.
விலங்குகள் பேசினால்!
"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" - இதோட உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்!
தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
{{comments.comment}}