- கலைவாணி கோபால்
சிவாய நம
ஒரு நம்பி அப்பூதி அடியாருக்கும் அடியேன்
சோழ நாட்டில் உள்ள திருவையாறு பக்கம் இருக்கின்றது திங்களூர். திங்களூர், சந்திரனுக்கான பிரதான தலமாக கருதப்படுகிறது.
இந்த ஊரில் பெரிய மரியாதையுடனும், பக்தியுடனும், செல்வந்தராகவும், வாழ்ந்து வந்தவர் அப்பூதி அடிகளார் . இவர் சிவத்தொண்டும் சிவனடியாருக்கான தொண்டையுமே உயிர் மூச்சாகக் கொண்டு சிவ பணிகள் செய்து வந்தவர். இவர் மனைவியும் இவரைப் போன்றே சிவ பணிகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்.
அவர் மட்டுமல்லாது, அவரின் குடும்பமே! அவரின், சிவத்தொண்டிற்கு மிக்க உறுதுணையாகவும் பலமாகவும் நின்றது. இவர் எம்பிரான் திருநாவுக்கரசரை பார்க்காமலே, அவரை மனதுக்குள் குருவாகவும், சிவமாகவும் எண்ணி போற்றி வாழ்ந்தவர்.
இவர் செய்யும் அனைத்து சிவ பணிகளிலும், அன்னச்சத்திரம், மண்டபம் ,குளம், நீர்ப்பந்தல், வெய்யப்பட்ட குடிசை, அதாவது...... சிவனடியார்கள் தங்குவதற்கு என்னென்ன வேண்டுமோ? அவர்கள் இளைப்பாவதற்கு, என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ? அத்தனையும் நாவுக்கரசரின் பெயரால் செய்து வந்தவர் .அந்த அளவிற்கு குருவின் மீது இவரின் பக்தி எல்லையற்று இருந்தது.
இத்தனைக்கும் இவர் ஒரு முறை கூட நாவுக்கரசர் பெறுமானை பார்த்ததில்லை. பார்க்காமலே இவரின் பக்தி அவர் மீது மேலோங்கி இருந்தது.

திருநாவுக்கரசர் பெருமானுக்கு சிவனைத் தவிர எவரையும் தெரியாது. அப்பூதியடிகளாருக்கு திருநாவுக்கரசரைத் தவிர எவரையும் தெரியாது. இருவருக்கும் ஒரே இணைப்புதான் சிவன்...... சமணர்களின் பிடியில் சிக்கிய திருநாவுக்கரசரை சிவபெருமான் எப்படி எல்லாம் இவரை பாதுகாத்தார்? என்பதை நினைத்து திருநாவுக்கரசரை சிவபெருமான் பாதுகாக்கும் அளவுக்கு நாவுக்கரசர் பெருமானின் பக்தி எப்படி இருந்திருக்கும்? என்பதை நினைக்கும் போதே..... இவரின் குரு உணர்வு இவரை மிகவும் உணர்ச்சிமிக்க குரு பக்தியாக பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
அப்பூதி அடிகளாரின் தொண்டுகள் அனைத்தும் நவுக்கரசர் பெருமானின் காதுக்கு எட்டியது. அதனால் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாவுக்கரசருக்கு உதித்தது. அவரும் தின்களூருக்கு புறப்பட்டு சென்றார். திங்களூருக்கு சென்று பார்த்தபோது அங்கு, ஊரில் திரும்பும் இடமெல்லாம் நாவுக்கரசர் பந்தல், நாவுக்கரசர் அன்னதான கூடம், நாவுக்கரசர் மடம், நாவுக்கரசர் தண்ணீர் பந்தல், அதுமட்டுமல்லாமல் அப்பூதி அடிகளாரின் இல்லம்,, அவர்களின் பசுமாடு அவர்களின் மகன்கள், என அனைத்திற்கும் நாவுக்கரசரின் பெயரை இடம் பெற்று இருந்தது. அதனைக் கண்டு மிகவும் வியப்புற்றார் நாவுக்கரசர்.
இவற்றையெல்லாம் கவனித்து விட்டு அப்பூதி அடிகளாரின் வீட்டுக்கு சென்றார் நாவுக்கரசர். அப்பூதி அடிகளாருக்கு இவர் சென்ற போது இவர் யார் என்று அவருக்குத் தெரியாது .இவரும் இவரை யார் என்று காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல வீடு தேடி வரும் சிவனடியார்களை எப்படி கவனிப்பாரோ? அதேபோல், நாவுக்கரசர் பெருமானையும் வரவேற்று உபசரித்தார் அடிகளார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது நாவுக்கரசர் பெருமான்." நண்பரே நீங்கள் நிறைய தொண்டுகளை செய்கின்றீர்கள். ஆனால் ,உங்கள் பெயரால் செய்யாமல் ஏன் யாரோ ஒருவர் பெயரில் செய்ய வேண்டும் ."என கேட்க அப்பூதி அடிகளாரின் முகம் மாறியது .அவருக்கு கோபம் தோன்றியது 'யாரோ ஒருவர்' என்ற வார்த்தை அவரை மிகவும் சினத்தை தூண்டியது.
கொஞ்சம் கோபமாக ,ஐயா' நீர் சிவனடியார் தானே; உமக்கு திருநாவுக்கரசரை பற்றி தெரியாமல் இருந்தால் நீர் எப்படி ஒரு சிவனடியாராக இருக்க முடியும். சமணரை வென்று சைவம் தயக்க செய்தவர். கடலிலே கல்லை கட்டி எறிந்த போதும் கல்லில் தோணிபோல மிதந்தவர். மதுரை கூன் பாண்டியனின் கொடுநோயினை தீர்த்து அவரை சைவம் பால் திரும்பச் செய்தவர் என நாவுக்கரசரின் பெருமைகளை நாவுக்கரசர் பெருமானிடமே எடுத்துரைத்தார்
தான் செய்யும் அனைத்து தொண்டுகளின் உயிர் மூச்சு தன் குருவானநாவுக்கரசர் பெருமான் தான் வந்திருக்கிறார் என்பதை அறியாமலேயே யாரோ ஒருவர் என்ற வார்த்தை அவரிடமே கோபமாக சொல்ல வைத்தது அவரின் பெருமைகளை;
தன் புகழ்களை இப்படி ஒரு தொண்டன் சொல்கிறானே! என்று எண்ணி நாவுக்கரசர் பெருமான் தான் யார் என்பதை அப்பூதி அடிகளிடம் எடுத்துரைத்தார்.
இதை கேள்வியுற்று 'தெய்வம் கண்ட பக்தன் போல'' 'கண் பெற்ற குருடன் போல' அவ்வளவு ஆனந்தம்...... சற்று நேரம் பேசாமல் அப்படியே சிலையாய் நின்றார். ஆனந்தத்தில் கண்ணீர் துளிகள் பெருகின யாருடைய புகழ் கேட்டு ,சிவ பக்தி கேட்டு ,குருநாதர் என மனதால் வணங்கினாரோ? அவரே, தன் வீட்டுக்கு தன்னை தேடி வந்திருப்பதைக் கண்டு அவரும் அவரின் குடும்பத்தாரும் பெரும் மகிழ்ச்சியில் திலைத்தனர். அவரை ,வரவேற்று பாத பூஜை செய்து அந்தத் தண்ணீரையே; தலையில் தெளித்து, வீடு முழுக்க தெளித்துக் கொண்டு, மகிழ்ச்சியில் குடும்பமே ஆரவாரம் செய்தது.
அடியார் வந்தார் அவருக்கு உணவு சமைக்காமல் எப்படி? அதுவும் அவரின் உயிர்மூச்சான குருவே சிவமே வந்திருப்பதை கண்டு அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சமையல் முடிந்தது. வீட்டில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக அவருக்கு உணவு பரிமாறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கும் போது ,தாயார் மூத்த திருநாவுக்கரசரை அழைத்து வாழையிலை அறுத்து வர சொன்னார். நிகழவிருக்கும் பேராபத்தை நினைக்காமல் மூத்த திருநாவுக்கரசும் சுருட்டிய தலைவாழை இலையை அறுக்கும்போது அதில் குடி கொண்டு இருந்த மிகவும் விஷம் கொண்ட கொடிய பாம்பு அவரை தீண்டியது. கொடிய பாம்பு தீண்டியது தெரிந்தும் தன்னால் அடியவரின் உணவுக்கான போஜனைகள் நின்று விடக்கூடாது என எண்ணி, அந்த இலையை தாயாரிடம் கொடுத்துவிட்டு அங்கே வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்தார் மூத்த திருநாவுக்கரசர்.
இதைக் கண்டு தாயின் உள்ளம் மிகவும் பதறியது, கதறினார் ,கண்ணீர் வடித்தார். என்ன செய்வது ?என்று அறியாமல் அப்பூதி அடிகளாரை மௌனமாக அழைத்தார். அங்கு வந்து பார்த்தபோது தந்தையாயிற்றே.. மகன் இறந்ததை கண்டு அழாமல் இருக்க முடியுமா? அவரும் அழுதார் சிறிய திருநாவுக்கரசரும், அவருடைய அம்மாவும், அனைவரும் அழுதனர் .ஆனால், எக்காரணம் கொண்டும் தான் வந்து கால் வைத்த நேரம் இப்படி ஆகிவிட்டதே! என்று குருவின் மனது சங்கடப்படக் கூடாது. என்பதை நினைத்து இறந்தது மீண்டும் வரப்போவதில்லை. என்று எண்ணி சிவத்தொண்டே மிகப்பெரியது. தர்மம். எனக் கொண்டு, ஈச்சம் பாயில் தன் மகன் உடலை சுற்றி ஓரமாக வைத்துவிட்டு, திருநாவுக்கரசர் பெருமானிடம் மீண்டும் உணவு பரிமாற வந்தனர் அனைவரும் தங்கள் வருத்தத்தை மறைத்துக் கொண்டு,
திருநாவுக்கரசருக்கு வாழையிலை வைத்து உணவுகள் பரிமாறப்பட்டது. அப்போது, அம்மையாரின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் இலையில் விழுந்ததை கண்டு நாவக்கரசர் பெருமான் ஏதோ ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார்.
இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், குடும்பமாக அமருங்கள் பதிகம் பாடிவிட்டு பின்பு அனைவரும் ஒன்றாக சாப்பிடலாம் என்று குடும்பத்தினரை அழைத்தார் .மூத்த திருநாவுக்கரசரை தவிர அனைவரும் வந்து அமர்ந்தனர். மூத்த திருநாவுக்கரசு எங்கே ?என்று நாவக்கரசர் கேட்டார் அதற்கு அடிகளார்"அவன் இப்போது உதவ மாட்டான் நாம் உண்ணலாம் .எனச் சொன்னார் அடிகளார். அவன் இல்லாமல் ,நாம் உண்ண மாட்டோம். என தீர்க்கமாக நாவுக்கரசர் சொன்னதால், வேறு வழியின்றி நடந்ததை அவரிடம் தெரிவித்தனர் குடும்பத்தினர்.
உடனே பாயில் சுருட்டி கிடந்த பிள்ளையை தூக்கிக்கொண்டு அங்குள்ள சிவாலயத்திற்கு சென்று...." ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர் ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே". என்ற பதிகத்தை சிவனை நினைத்து பாட ,விடப்பாம்பு தீண்டிய மூத்த திருநாவுக்கரசர் பத்தாவது, பாடலில் முடிவில் கண்ணை திறந்து பார்த்தார். அவர் மீண்டும் உயிருடன் வந்தார்.
அங்கு கூடியிருந்த கூட்டம் அனைத்தும் திகைப்பில் நின்றது. மகனைக் கண்ட தாய் கட்டி அணைத்து கண்ணீர் வடித்தார். தன் குருவும், சிவகமாகவே கருதும் நாவுக்கரசர் தன் மகனை மீட்டு தந்தது அப்பூதி அடிகளாரின் மகிழ்ச்சி மிகவும் அதிகமானது. இருந்தாலும் கூட, உணவு உண்ணும் சமயத்தில் இது நடந்ததே மீண்டும் உணவு உண்ணலாம் என நாவுக்கரசர் பெருமானை அழைத்தார்.
தன் மகன் உயிருடன் வந்ததையும் கருதாமல், தான் உணவு உண்ணாமல் இருப்பது இவரின் எண்ணமாக இருந்து கொண்டுள்ளது என்ன ஒரு குரு பக்தி என நினைத்து நாவுக்கரசர் அப்பூதி அடிகளாரை கட்டி அணைத்துக் கொண்டார்.
சில காலம் அவரின் இல்லத்திலேயே தங்கி , அவர்களை எல்லாம் ஆசீர்வதித்து விட்டு வேற்றிடம் சென்றார். தன் குருவுக்கும் மேலான மிகப் பெரும் பக்திக்கு சாட்சியாக சிவன் மேல் கொண்ட அன்பு காரணமாய் உதித்த அன்பு. கிடைத்த குருவினை சிவகமாகவே நினைத்து பின் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளான போதும் அதையும் நினைக்காமல், தன் குரு பக்தியே உயிர் தொண்டாக கொண்டு வாழ்ந்தவர் .அப்பூதி அடிகளாரின் சேவை மிகவும் பெருமை வாழ்ந்தது. சிவன் மேல் கொண்ட அன்பும் ,அந்த அன்பினை, சிவனடியார் மேல் பணிவாய் காட்டியுமே ,அவர் பெரும் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.அவர் ஆனால் உள்ளவரை சிவதொண்டினை முழுமூச்சாக செய்து கயிலாயம் ஏகினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ? பணக்காரர்கள் வாழ்ந்தனர் .ஆனால், சிவத்தொண்டின் மூலம் இன்றளவும் இவர் பெயர் மட்டுமே நிலைத்து நிற்கின்றது. 63 நாயன்மார்களில் ஒருவராக நிலை நிறுத்தப்பட்டு உள்ளார். இவரின் குருபூஜை தை மாதம் ஒரு சதய நட்சத்திரத்தை அவர் முக்தி அடைந்த நாளில் கொண்டாடப்படுகிறது .திங்களூர் கைலாசநாதர் திருக்கோயிலில் அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அவர் நினைவாக பெரும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
அப்பூதி அடிகளார் திருவடிகள் போற்றி போற்றி!
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
வான் சிறப்பு .. மாமழை போற்றுதும்..மாமழை போற்றுதம்!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
ஒரு நம்பி அப்பூதி அடியாருக்கும் அடியேன் .. அப்பூதி நாயனார்
கற்பனைக் குதிரை
அஞ்சல்துறையின் அருமை உணர்வோம்!
டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
மீண்டும் என் தந்தை!
{{comments.comment}}