முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

Sep 18, 2026,01:57 PM IST

சென்னை : தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு, தொழில் துறை மற்றும் மாநில வளர்ச்சி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து கடுமையான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.  


 "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள்" :

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.ஆர்.பி. ராஜா, தவெக அரசு விளம்பர அரசியல் மட்டுமே செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 'ரீல்' விட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று சாடிய அவர், ரீல்ஸ் மோகத்திற்காகவே முதல்வர் விஜய் லண்டன் சென்றாரா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார். மேலும், முதலீடுகள் விஷயத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்ற நன்நோக்கோடு, தாம் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் பயணத்தின் முடிவில் லண்டனில் இருந்து வெறும் ரீல்ஸ்கள் மட்டுமே வெளிவந்துள்ளனவே தவிர, ஒரு புதிய முதலீடு கூட வரவில்லை என்று தெரிவித்தார்.   


"திமுக ஆட்சிக் கால முதலீடுகளுக்குச் சொந்தம் கொண்டாடும் தவெக" :




திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு ரூ. 12.5 லட்சம் கோடி அளவிற்கு அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டிய டி.ஆர்.பி. ராஜா, அன்றைய காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களை, தங்களால் கொண்டுவரப்பட்டவை என தவெக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து சொந்தம் கொண்டாடி வருகிறது என்று குற்றம்சாட்டினார். முதல்வர் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகள்தொழில்துறை தொடர்பாக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பின்வரும் முக்கிய கேள்விகளை எழுப்பினார்:   


எப்போதுதான் புதிய முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன?  


"முதலீடு செய்ய விரும்புகிறார்கள்" என வெறும் கதைகளைக் கட்டித் திரியாமல், உண்மையில் என்ன முதலீடு ஈர்க்கப்பட்டு நாட்டிற்கு வந்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.   


லண்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து முதல்வர் விஜய் ஏன் இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்து முறையான விளக்கமளிக்கவில்லை?   


முதலீடுகள் என்ற பெயரில் வெறும் விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் தமிழ்நாட்டிற்கு வந்த உண்மையான முதலீட்டு விவரங்களை தவெக அரசு உடனடியாக மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

விழுந்தாலும் விலகி விடாதே!

news

தலை கோதும் என் தாழம் பூவே!

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்