இன்றைய மாணவ மாணவிகள் பலரும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டுத் தலையை வாராமல் விரித்துப் போடுகிறார்கள்; தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை. எண்ணெய் தேய்ப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள் உணருவதில்லை.
ஒரு செடி செழித்து வளரத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல நமது தலைமுடிக்கும் எண்ணெய், புரதச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை மிகவும் அவசியம். செம்பருத்திப் பூ, கருவேப்பிலை, கற்றாழை, வெந்தயம் போன்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்திப் பராமரிக்க வேண்டிய சரியான பருவம் இந்த இளமைப் பருவமே! ஏனெனில், இந்த வயதில்தான் முடி நன்றாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்து வரும்பொழுது, அது அவர்களின் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தருகிறது.
நெற்றியில் திலகமிடுவதன் நன்மைகள்:

குழந்தைகள் குளித்து முடித்தவுடன் நெற்றியில் திலகமிடுவது பல நன்மைகளைத் தரும். நமது நடு நெற்றியில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அங்குதான் நமது குலதெய்வம், இஷ்டதெய்வம், ஊர்தெய்வம் மற்றும் காவல் தெய்வங்களின் அருட்காட்சி அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
நமக்குச் சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் நம்மை அணுகாமல் இருக்கவும், நேர்மறை ஆற்றலை உருவாக்கவும் சந்தனம், குங்குமம் மற்றும் திருநீறு ஆகியவற்றை தினமும் அணிந்து செல்ல வேண்டும். சந்தனம் உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். இவை அனைத்தும் கெட்ட எண்ணங்களை அகற்றி, நல்ல ஆற்றலை நமக்குத் தரும்.
ஆன்மீக அறிவும் குடும்பப் பயிற்சியும்:
பெற்றோர்கள் வாரம் ஒருமுறையாவது குடும்பத்தோடு குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு ஒவ்வொரு தெய்வத்தின் மகிமைகளையும், கதைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தின் மீது விருப்பம் ஏற்படும்.
ஒவ்வொரு தெய்வத்தின் மகிமை என்ன, அந்தக் கோயில் எதற்காகக் கட்டப்பட்டது, அதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை தினமும் அல்லது வாரம் ஒருமுறை குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும்.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
விழுந்தாலும் விலகி விடாதே!
தலை கோதும் என் தாழம் பூவே!
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
{{comments.comment}}