இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

Nov 02, 2026,04:22 PM IST

- பாரதிராஜன்


12/7/1938ல் சங்கர சுப்பிரமணிஐயர் என்ற பெயரில் பிறந்தவர்தான், பின்னாளில் ஜெய் சங்கர் என்ற பெயரில் திரையில் அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கினார்.


திருநெல்வேலியில் பிறந்தவர் ஜெய்சங்கர். சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். ஹைஸ்கூல் மாணவர். புதுக்கல்லூரி மூலமாக பட்டதாரியானார். சட்டபடிப்பு சேர்ந்து பாதியில் நின்றது. 


நடிகர் சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் மூலமாக நாடகத்தில் சிறு சிறுவேடங்கள். தொடர்ந்து கூத்தபிரான்  கல்கி பைன் ஆர்ட்ஸ் மூலமாக நிறைய நாடகங்கள். முதல்படமான இரவும் பகலும் படத்தில் பட்டையை கிளப்பினார். தொடர்ந்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டு வல்லவன் ஒருவன் , சிஐடிசங்கர் என பல படங்கள்.


மேலும் வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் அழைக்கப்பட்டார். பட்டணத்தில் பூதம் அகஸ்தியா தியேட்டர் ஆரம்பித்த போது வெளியான படம். பாலச்சந்தர் படங்களான நூற்றுக்கு நூறு அருமையான கல்லூரி புரொபசர் வேடம். குலமா குணமா படத்தில் சிவாஜியின் தம்பி. அன்பளிப்பு படத்தில் சிவாஜியின் நண்பன். 




அன்பு சகோதரன் படத்தில் அதிகாரி வேடம். ஏற்காத வேடம் இல்லை. நிறைய படத்தயாரிப்பாளர் கொடுத்த நிறைய காசோலைகள் பணமாக்க முடியாமல் திரும்பியது அவரிடம் இருந்தது.


தேவர் பிலிம்ஸ் படமான மாணவன் படம் ஒரு மைல்கல். ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா போன்ற நடிகைகளுடன் நடித்தவர். ஜெமினியுடன் எதிர்காலம், கமலுடன் சவால், ரஜனியுடன் அருணாச்சலம். 1984ல் வெளியான விதி வக்கீல் வேடம். ரஜினியுடன் 15படங்களிலும், கமலுடன் 9 படங்களிலும் நடித்தவர் ஜெய்சங்கர்.


அனாதை இல்லங்களுக்கு நிறைய உதவி செய்தவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் உதவியவர். 

அவர் மயிலாப்பூரில் படித்த பி.எஸ். பள்ளி மாணவன் என்பதில் பெருமை அடைகிறேன்.

 

தவிர அம்பத்தூரிலுள்ள அவர் சம்பந்தி என் நண்பர். ஜெய்சங்கரின் மகன் விஜய்சங்கர், ஒரு டாக்டர். தன்

தந்தையின் பிறந்த நாளன்று வருடா வருடம் 15 நபர்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்கிறார். தன் தந்தை பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து இருதய சிகிச்சை செய்ய திட்டம் வைத்துள்ளார் டாக்டர் விஜய் சங்கர்.


ஹார்ட் அட்டாக் காரணமாக 03/06/2000ல் காலமானார் ஜெய்சங்கர். மறக்க முடியாத ஒரு  நல்ல நடிகர் மட்டுமல்ல, மனிதரும் கூட.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருவேல் முருகனுக்கு அரோகரா.. ஞானவேல் முருகனுக்கு அரோகரா

news

தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்

news

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!

news

‘முரசு’ புயல் எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை

news

செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்

news

சிறைச்சாலை பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டால்... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

news

குயிலின் கூவலாய்!

news

இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

news

தீபாவளி கொண்டாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்