அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

Nov 02, 2026,02:26 PM IST

- ஈரோடு மாலதி


நான் இன்று ஒரு வித்தியாசமான பிரியாணி செய்தேன். இது விதம் விதமான கலர் கொண்ட, அதாவது, அவரைக்காய், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு என மொத்தம் 8 பொருட்கள் கலந்த ஒரு ஸ்பெஷல் பிரியாணி! இதை வித்தியாசமான பிரியாணி அல்லது 'நவதானிய பிரியாணி' என்றும் சொல்லலாம். 


குழந்தைகள் நவதானியங்களைச் சரியாகச் சாப்பிடுவதில்லை; எனவே, இப்படியும் பிரியாணி செய்து கொடுக்கலாம். நிச்சயம் குட்டீஸ் இதை விரும்பிச் சாப்பிடுவாங்க மக்களே!


எப்போது போல நாம் பிரியாணி செய்வதற்குப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிரியாணி மசாலாவில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு.


நம் நாட்டின் பிரியாணி மசாலாப் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம் போன்றவைக்காக பல நாடுகள் கூட பொறாமைப்படும். இதில் உள்ள சீரகத்தின் விளக்கத்தைப் பாருங்கள்:- சீர் + அகம் = சீரகம். அதாவது, நமது உடலுக்குள்ளே இருக்கும் அனைத்து உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய மிகப்பெரிய மருந்து இது. தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் அனைத்தையும் கரைக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு.




அதேபோல, சோம்புக்கு வாய் துர்நாற்றத்தைப் போக்கி ஒரு சிறப்பான நறுமணத்தைக் கொடுக்கக்கூடிய மகிமை உண்டு. பட்டைக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். மிளகின் குணம் உங்களுக்குத் தெரியும்; சளித் தொல்லை மற்றும் நெஞ்சுச் சளி உள்ளவர்களுக்கு மிளகும் ரசமும் அருமருந்து. 


கொல்லிமலையில் நான் முதல்முறையாகச் சர்வ சாதாரணமாக வளர்ந்திருந்த பிரிஞ்சி இலையைப் பார்த்திருக்கிறேன். அண்ணாச்சிப் பூ, ரோஜாப் பூ என இத்தனை பொருட்களும் சேர்ந்துதான் ஒரு பிரியாணி உருவாகிறது.


கூடவே புதினாவும் சேர்ப்பதால், அது புத்துணர்ச்சி அளிப்பதோடு வயிறையும் சுத்தம் செய்கிறது. கிட்டத்தட்ட 15 பொருட்கள் இந்தப் பிரியாணியில் சேர்க்கப்படுவதால், அனைத்து சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கின்றன. விட்டமின்கள், மினரல்ஸ், எதிர்ப்பு சக்தி, கெட்ட கொழுப்பை அளிக்கும் சக்தி, புரதம் மற்றும் நார்ச்சத்து என அனைத்தும் இந்தப் பிரியாணிக்குள் அடங்கியுள்ளன.


பழங்காலத்தில் கோவில்களிலும் சரி, இப்போதும் சரி பருப்பு சாதம் போடுவார்கள். கர்நாடகாவில் இது ரொம்ப ஃபேமஸ். 'ஹரே ராம் ஹரே கிருஷ்ணா' கோவில்களில் பார்த்தீர்கள் என்றால், சீரகம் போட்டுச் செய்யப்படும் பருப்பு அரிசி சாதம் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.


கர்நாடக விசேஷங்களில் செய்யப்படும் பருப்பு அரிசி சாதத்தில் நீர்ச்சத்து மற்றும் புரோட்டின் காய்கள் என 16 வகை காய்கள் கலந்து செய்வார்கள். இதற்குப் பெயர் 'பிஸி பேலே பாத்' (சூடான பருப்பு காய்கறி சாதம்). இது சூடாக இருக்கும்போது, அதனுடன் 'சோர்' அல்லது பூந்தி சேர்த்துச் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.


இப்போதுள்ள காலத்தில் எல்லோரும் அவரைப் பருப்புகளை மறந்துவிட்டார்கள். ஆனால், நமது பாரம்பரியத்தில் பல வகையான அவரைக்காய்கள் உள்ளன.


சிவப்பு நீளமான அவரை

கருப்பு குண்டு அவரை

சந்தன கலர் அவரை

வெள்ளை கொட்டை அவரை

பீன்ஸ் பருப்பு / கருப்பு அவரை / பட்டை அவரை

நாட்டவரை கொட்டை


இப்படி பத்துக்கு மேற்பட்ட நாட்டு அவரை வகைகள் உள்ளன. இதெல்லாம் கலக்கும்போது உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கிறது.


இன்று நான் வித்தியாசமாக யோசித்து இந்தச் சமையலைச் செய்தேன். எப்போதும் புளிக்குழம்பு, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு என்று செய்வதற்குப் பதிலாக, நீங்களும் இதைச் செய்து பாருங்கள்; மிகவும் சிறப்பாக இருக்கும், எல்லோரும் விரும்பி உண்பார்கள்.


பூண்டு இதயத்தைச் சுத்தப்படுத்துவதுடன், நரம்புகளில் ஏற்படும் வாயுத் தொல்லையையும் நீக்கும். இஞ்சியின் அருமையை கொரோனா காலங்களில் அனைவரும் உணர்ந்தோம். "பட்டை, இஞ்சிக்கு நிகர் இந்த உலகத்திலேயே வேறு எதுவும் இல்லை" என்பார்கள். அந்தக் காலத்தில் இஞ்சி மிட்டாய் சாப்பிடுவார்கள்.


கொத்தமல்லியும் புதினாவும் நம் உடலில் ஒவ்வொரு நாளும் புதிய உயிர்சத்துக்களை உருவாக்க உதவுகின்றன. நாம் சாப்பிடும் உணவிலிருந்து உயிர்சத்துக்கள் மென்மேலும் உறுதியடைவதற்குப் புதினாவும் கொத்தமல்லியும் உதவுகின்றன. மேலும், கடினமான மாமிச உணவுகளைக் கூட எளிதில் கரைக்கும் தன்மை இஞ்சியிடம் உண்டு.


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாவைக் கூத்து!

news

2026ம் ஆண்டின் 11வது மாதம் வந்தாச்சு.. நவம்பர் மாத சிறப்புகள்!

news

அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

news

அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

news

லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

news

என்னை நான் நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (11)

news

பெண்!

news

திருமண விருந்து.. ஒரு நிமிடக் கதை (51)

news

தீபாவளி பலகாரம் கடையில் வாங்கப் போறீங்களா? உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்