- பா. பானுமதி
அழகை அள்ளித் தருமோ என்னவோ
அலைச்சலை மட்டும் அனுதினம் தரும்
மகிழ்ச்சியை நாளும் தருமோ இல்லையோ
மன வலிமையை மறக்காது தரும்
அதிர்ஷ்டத்தை சிலருக்கு தரலாம்
ஆனால் அனுபவத்தை அனைவருக்கும் தரும்
நினைத்தது நடக்கலாம் சில நேரம்
நினைக்காததே நடக்கும் எந்நேரம்
கேட்டது கிடைக்கும் பலருக்கு
கேளாமலே கிடைக்கும் சிலருக்கு

நினைத்தது முடிக்கலாம் சில நாள்
நிறைவேற்றி முடிப்பதே எந்நாளும்
அமைதியை சில போட்டு தந்தாலும்
ஆர்ப்பாட்டம் பெரும்பொழுது தந்துவிடும்
அமைதி ஒருபோது கிடைக்கும்
அதிர்ச்சி அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கும்
மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே சில நேரம் ஏற்படும்
அதிர்ச்சியை சமயத்தில் செய்து அற்புதத்தை ஒரு சமயம் கொய்துவிடும்
ஆனாலும் அலட்டிக் கொள்ளாமலே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் அதுவே அதன் மகிமை
வருவதும் போதுமாய் நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்
தேவையையும் சேவையுமாய் பொழுதுகள் சென்று கொண்டே இருக்கும்
உறக்கம் விழிப்புமாய் உறவுகள் உறவாடிக் கொண்டே இருக்கும்
இருப்பதும் இல்லாதது போல் ஏதோ மாயங்கள் நடந்து கொண்டே இருக்கும்
கற்றதும் பெற்றதும் என காலங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கும்
நிற்பதும் செல்வதும் என எது நிகழ்ந்து கொண்டே இருக்கும்
கல்வியும் செல்வமும் நம்மை கரை சேர்த்து அலையடித்துக் கொண்டிருக்கும்
பெற்றவரும் பிள்ளைகளும் பிணைத்து பெருமை பேசிக்கொண்டிருக்கும்
சோதனைகளும் சாதனைகளையும் சுற்றி வந்து கொண்டிருக்கும்
வேதனைகளும் வெளிச்சங்களும் விழியை விட்டு விலகாது இருக்கும்
கதைகளும் கவிதைகளும் அவ்வப்போது கண்மலரச்செய்யும்
இலக்கியங்களும் கலைகளும் இதயத்திற்கு இதம் சேர்க்கும்
வலிகளும் கிலிகளும் வந்து போய் கொண்டே இருக்கும்
வாழ்க்கை தருவதை எல்லாம் வாங்கிக் கொள்ள வேண்டும்
கேட்பதையெல்லாம் கொடுத்து விட வேண்டும்
விருப்பம் இன்றைய விளையாட்டுகள் நடக்கும்
ஒரு பொறுப்பாக்கி பல புயல்கள் அடிக்கும்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆடிக்கொண்டே அலையடிக்க வேண்டும்
வாழ்க்கை ஒரு வசீகர புத்தகம் உன்னை வளைத்து போடும்
துப்பறிவும் நூலாகி விறுவிறுப்பாக உன்னை துளைத்து எடுக்கும்
ஆன்மீக நூலாகி அமைதியாக படுக்கச் செய்யும்
அருமையான நூலாகி அனுதினம் செய்திகளை தரும்
வாழ்நாள் முடியும் வரை வந்து கொண்டே இருக்கும் புதுபுது தகவல்கள்
வாழ்க்கை ஒரு வற்றாத புதினம்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram
Poem on Life: வாழ்க்கை!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
{{comments.comment}}