நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

Feb 04, 2026,06:00 PM IST

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் சார் தேர்தல் பணிகளுக்கு எதிரான வழக்கில் இன்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதாடி புதிய வரலாறு படைத்துள்ளார்.


உச்சநீதிமன்ற வழக்கில் ஒரு மாநில முதல்வர் ஒரு வழக்கில் ஆஜராகி வாதாடியது இதுவே முதல் முறையாகும் என்பதால் மமதா பானர்ஜி தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளார்.




மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை நடத்தி வருகிறது (SIR). இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார்.


தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வின் முன் ஆஜரான மம்தா பானர்ஜி வாதிடுகையில், நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுதுகொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகும். தயவுசெய்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்.


இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை கடிதம் எழுதியும் எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. எனது தொகுதியில் மட்டும் சுமார் 40,000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நான் ஒரு கட்சி சார்பில் வாதாட வரவில்லை, மக்களுக்காக வாதாடுகிறேன் என்றார் மமதா பானர்ஜி.


மம்தா பானர்ஜியின் வாதங்களைக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இது குறித்த மனு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வழக்கின் விசாரணையின்போது மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்களில் ஒரு நியாயம்  உள்ளது. அதை புறக்கணிக்க முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. தேர்தல் ஆணையம் அதை சரி செய்ய முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்