சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.

Aug 08, 2026,12:48 PM IST

-  அ.தாமஸ்


"முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது." ஆம், நம் வளர்ச்சி ஒன்றையே தன் உயர் மகிழ்ச்சியாய்க் கருதி அதிலே நிறைவு காணும் தன்னலமற்ற தியாகிகள், அவர்களின் விடுபட்ட எண்ணங்களை நம்மில் நிறைவேற்ற முனைபவர்கள்; அதை முறையாய் நிறைவேற்றும்  வழி தேடுபவர்கள். எனவே அவர்களின் கருத்துரைகளை ஏற்று அதுவே நம் வளர்ச்சியின் முகப்புரை என்பதை அவர்களும் அறிய உணர்த்துவோம், அவர்களின் மகிழ்வையும் தினம் உயர்த்துவோம்.


நம் முன்னோர்கள், கேட்பதையெல்லாம்  கொடுத்து நம் உழைப்பை சிதைப்பவர்கள் அல்ல, மாறாக  தேடிப் பெறும் வாய்ப்பையும், தேடிப் பெறுவதால் கிடைக்கும் பேரின்பத்தையும்  உணர்த்துபவர்கள். எனவே தொய்வின்றித் தேடுங்கள், தேடலால் மட்டுமே உங்களின் இலக்கை அடையுங்கள்.


நம் முன்னோர்கள் உடல் உழைப்பால் உயர்ந்தவர்கள், பண மதிப்பால் நிறைந்தவர்கள்; இன்று இவை அனைத்தையும் கடந்து, இறையச்சமே உச்சம் என்பதை உணர்ந்தவர்கள். எனவே இறையச்சம் உணர்வோம், உயர் உச்சம் அடைவோம்.




முதுமை என்பது புதிதாய் உதிப்பதல்ல; பலநாள் வளர்ச்சியின் முதிர்ச்சியே முதுமை. எனவே அவர்கள் பயனற்றவர்கள் என்பதை மறந்து, அவர்களால் நாம் பயன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து தினம்  அவர்களின் வார்த்தைகளை மதிப்போம், அவர்தம் அனுபவத்தோடு நம்மையும் இணைப்போம், என்றும் அழியாத புகழோடு நிலைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்