என்னுள் உறைந்தவன்(ள்)

Aug 08, 2026,12:08 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அகிலத்தின் பவித்திரமான பழமையில் என்றும் புதுமையானவன்!

ஆன்றோர் சான்றோரும் மொழிந்து வியந்தவன்!


இயல் இசை நாடகமென இன்பமாகி முத்தமிழானவன்! 

ஈசனே இமை மூடி ரசிக்கும் இராகமவன்!


உலக வரலாற்றில் இன்றும் தடம் புரளாதவன்!

ஊரார் போற்றும் உன்னதமானகருவூலமவன்!


எட்டுத்திக்கும் பரவிக் கிடக்கும் பழரசமவன்!

ஏகாந்தத்திலும் ஏட்டையும் நிறைக்கும் சக்தி வாய்ந்தவன்!




ஐயனையும் ஆட்கொண்டு இரு வரியால் வையகத்தை ஆள்பவன்! 

ஒரு வரி வைரமாக கவிதையாகி வானுயர்ந்து மின்னுபவன்! 


ஓவியமாக காவியமாக கதைகள் பேசி சரித்திரம் படைத்தவன்!

ஔடதமாக வருடும் வித்தையும் நளினமாகக் கற்றுத் தேர்ந்தவன்!


அஃதே ஆணிவேராய் பல நூற்றாண்டு உயர்ந்தே வாழ்பவன்! 


சாகாவரம் பெற்றவன், 

என் உயிராகியவன்,

உதிரத்திலும் உறையாமல் கலந்தவன்! 


யார் அவன்? யாரவன்? யார் அவன்?


உன்னுள் என்னுள் ஒளி வீசிடும் தாய்மொழி தமிழ் அவன்......!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்