சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்துள்ள மான நஷ்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசாரமான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
போதைப்பொருள் கடத்தல் வழக்கின் குற்றவாளியான ஜான் பிரிட்டோவுடன் தன்னைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
கை சுத்தமில்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை" (Unclean hands) என்பதால், அவருக்கு நீதிமன்றத்தின் மூலம் எந்தவொரு நிவாரணமும் கோருவதற்குத் தகுதியோ உரிமையோ இல்லை.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்: உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பதிவுகளை வெளியிட்டதாக ஆதவ் அர்ஜுனா தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை.
வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை: உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கைக் கடுமையான அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு:
இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.இவ்வழக்கு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}