டெல்லி : 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி :
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி, போட்டியின் முடிவில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த மிகச்சிறப்பான வெற்றியின் மூலம் இந்திய அணி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
தமிழக வீராங்கனை கமலினிக்கு குவிழும் பாராட்டுகள் :

தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினி இடம்பெற்று மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குப் பங்காற்றிய கமலினிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு :
மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மதுரை வீராங்கனை கமலினிக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இளம் வயதிலேயே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள மதுரை வீராங்கனை கமலினியின் இந்த வெற்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்...தீவிரடையும் விசாரணை
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஆழித் தேராக அசைந்து வரும் உந்தன் அழகைப் பார்த்து!
Think less, live more
அம்மா எனும் காதல்!
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. அழகான உறவின் அடையளம்.. அண்ணன் தங்கை!
{{comments.comment}}