வேலே வருக...மனதை உருக வைக்கும் முருகன் வேல் பாடல்
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வேலே வருக வேலே வருக......
வேலவன் கரத்தின் வேலே வருக....!
வேலே வருக வேலே வருக.....
வேலவன் கரத்தின் வேலே வருக.......!
பழநி கிரியில் பாலமுருகன் வடிவில் .....
தோன்றிய வேலே வருக.......!
கந்தன் கரத்தில் கருணை வடிவாய் அழகு......
வேலே நீயே வருக.......!
அடியவர் வாழ்வில் அற்புதம் செய்யும் ......
அழகு வேலே வருக வருக........!
ஆழியின் அலை போல்
ஆடி ஆடி ........
அருகே நீயும்
அழகாய் வருக........!
குமரன் கையில் குழந்தை போல தவழும் ......
வேலே நீயே வருக......!
ஆறுமுகத்தில் ஆனந்தம் காண ......
அழகு வேலே வருக வருக.......!
செந்தில் நாதன் சிறிய
கரத்தில்.....
செண்பகப் பூ போல் சிரித்து வருக........!
அருளும் கரத்தில் தாமரை மலராய் ......
மலர்ந்த வேலே வருக வருக.......!
சுப்பிரமணியன் கையில் மின்னும்.....
சிங்கார வேலே வருக வருக.....!
சூரனை வென்ற சுந்தர வேலே ....
சுகமே காண வருக வருக.....!
முருகன் கரத்தில் முல்லை மலராய் ......
மலர்ந்த வேலே வருக வருக.......!
வள்ளி கணவன் மார்பில்
மலரும் ......
மல்லிகை மலர் போல் மகிழ்ந்து வருக......!
ஆனை முகத்தன் அன்பு தமையன்.....
அருகில் இருக்கும் அழகு வேலே......!
கயிலை மைந்தன் கரத்தில் அருளும் .....
கந்த வேலே வருக வருக......!
மயிலின் மடியில் துயிலும் வேலன் .....
கரத்தில் பிடித்த வீர வேலே.......!
துயரம் தீர்க்க துன்பம் போக்க.....
விரைவாய் நீயும் விரைந்து வருக......!
தேவயானை கரம் பிடித்த தணிகை ......
நாதனின் கருணை வேலே......!
வேகம் தணிந்து அன்பை பொழியும்......
சங்கடம் தீர்க்கும் சரவணன் கையில்......
சக்தி வேலே வருக வருக....!
ஞானம் அருளும் அன்பு கரத்தால் ......
நீயும் அருள வருக வருக.....!
வேலே வருக வேலே வருக....
வேலவன்.... கரத்தின் வேலே வருக.....!
வேலே வருக வேலே வருக ....!
வேலே வருக வேலே வருக.....!
வேலே வருக .....!
வேலே வருக .....!
வேலே வருக.......!
வருக..... !வருக.....!
ஓம் முருகா சரணம்...
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)