- சிவ.ஆ. மலர்விழி ராஜா
கருணையின் வடிவே திரு உருவே.....
பாபா உந்தன் அற்புதங்கள்......
வாழும் காலம் யாவும் உந்தன் .....
வரமே அருளிட வேண்டுகிறோம்.....
மின்னல் ஒளியாய் கண்ணொளியை......
கருணையால் மீட்டு தந்தவரே .....
உள்ளம் மகிழ உன் புகழை.....
உலகம் போற்றிட நீ அருள்வாய் ......

உள்ளம் உருகிட வேண்டி வந்தோம் .....
தஞ்சமெனவே நீ அருள்வாய்.....
வரங்கள் நீயும் தந்தருள்வாய்.....
ஜகமே உந்தன் திருவடியை .....
தினமும் வணங்கிட மகிழ்ந்திடுவாய்......
துவாரகமாயினில் காட்சி தந்து.......
துனியினில் உதியாய் அருள்கின்றாய் .....
சாவடி ஊர்வல பல்லக்கில் .....
சாதுவாய் நீயும் வரம் தருவாய்.....
குருஸ்தானத்தில் அருளிடும்...
உன் மகிமை அகிலமே உன்னருள் வேண்டிடுமே
சாயி உந்தன் நாமங்கள் போற்றிட..... ஆனந்தமாகிடுமே....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
மூத்தவளாய் பிறந்தது அவள் குற்றமோ? .. சீதா (5)
சற்றே சங்க இலக்கியம் அறிவோமா.. பாடாண் திணையிலிருந்து ஒரு பாடல்!
ஓம் சாய் ராம்!
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஆண்களின் ஆதங்கம் நியாயமானதுதானே!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.. உலகிலேயே மிக உயரமான.. 81 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
நூல் பல கல் (சிறுகதை)
தானம் வீட்டிலிருந்து துவங்குகிறது!
{{comments.comment}}