கண்டிகை: செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை ஊக்குவிக்கும் வகையில் லாங்குவேஜ் எக்ஸ்போ 2026 (Language Expo 2026) நேற்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்களிப்போடு நடைபெற்ற இந்த கண்காட்சி, பார்ப்போரைக் வியப்பில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சிக்கு ஆங்கிலத் துறை விரிவுரையாளர் பி. ரஜனி மற்றும் காஞ்சிபுரம் IIITDM உதவிப் பேராசிரியர் டாக்டர் கந்தராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
6 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள், இவ்வளவு அசாத்தியமான படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சரளமான ஆங்கிலத் தொடர்புத் திறனுடன் திகழ்வதைக் கண்டு அவர்கள் வியந்து பாரட்டினர்.
வில்லுப்பாட்டு முதல் பொம்மலாட்டம் வரை: அசத்திய மாணவர்கள்

மாணவர்களின் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு புதுமையான செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன:
"தூய்மை இந்தியா, பசுமை இந்தியா" (Clean India, Green India) என்ற சமூகக் கருப்பொருளை மையமாக வைத்து, நமது பாரம்பரிய கலை வடிவமான வில்லுப்பாட்டை, ஆங்கிலத்தில் பாடி மாணவர்கள் அசத்தினர். இது அங்கிருந்த அனைவரின் பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்று விழாவின் முக்கிய அங்கமாக அமைந்தது.

பாலியல் வன்கொடுமை தடுப்பு (Preventing Sexual Abuse) என்ற தலைப்பில் மாணவர்கள் நடத்திய பொம்மலாட்டம் (Puppet Show) மூலம், சுய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்துக்கள் மிக ஆழமாகப் பதிவு செய்யப்பட்டன.
அர்த்தமுள்ள ஆங்கில நாடகங்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் மூலம் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆங்கிலக் கல்வி
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான ஆங்கில கற்றல் விளையாட்டை (Technology-based language learning game) அறிமுகப்படுத்தினர். டிஜிட்டல் கருவிகள் மூலம் ஆங்கில மொழியை எவ்வளவு எளிமையாகவும், சுவாரசியமாகவும், திறம்படவும் கற்றுக்கொள்ளலாம் என்பதை அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்துக் காட்டினர்.

ஊக்கமளித்த தலைமையாசிரியர்கள் & ஆசிரியர்கள்
இவ்விழாவை முன்னின்று நடத்திய பள்ளித் தலைமையாசிரியை அனுசுவா கேத்தரின், உதவித் தலைமையாசிரியர் (மேல்நிலை) பி. பெருமாள், உதவித் தலைமையாசிரியை (உயர்நிலை) எஸ். அகதா கிறிஸ்டி மற்றும் உதவித் தலைமையாசிரியை (நடுநிலை) கே. பாரதி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.
ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதலும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமே மாணவர்களின் இந்த அசாத்தியமான வெற்றிக்குக் காரணம் என்று விழாக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த விழா குறித்து ஆசிரியர் ஆனந்தி கூறுகையில், கல்பனா கோவிந்தராஜ் அவர்களின் பள்ளியில் நடைபெற்ற சிறப்பான கண்காட்சியைக் கண்டபோதே, நமது பள்ளியிலும் இது போன்ற ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இன்று இந்த 'லாங்குவேஜ் எக்ஸ்போ 2026' இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதற்கு அவரே விதை என்று நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

லாங்குவேஜ் எக்ஸ்போ 2026 என்பது வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல்; மாணவர்களின் படைப்பாற்றல், கூட்டுப்பணி, தன்னம்பிக்கை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பின் அடையாளமாகத் திகழ்ந்தது.
சரியான வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் கிடைத்தால், அரசுப் பள்ளி மாணவர்களாலும் ஆங்கில மொழியில் சாதனை படைக்க முடியும் என்பதை இந்நிகழ்வு நிரூபித்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
{{comments.comment}}