- எம்.கே. திருப்பதி
அரங்கனுக்கும் அவருக்கும்
அதே ஊர்:
அரங்கனுக்கும் அவருக்கும்
அதே பேர்!
ரங்கராஜன்கள் இருவரும்
ரசவாதிகள்:
அருளிலும் ஆராட்டலிலும்
அவரவர் அளவில்
அன்புத் தாதிகள்!
காவிரிக்கரை உதித்த - இந்த
கவிதைப் புயல்
மையம் கொண்டது
வங்கக் கரையில் :
வாலிபக் கவி
வகை தொகையில்லாமல்
வரிகளைக் கொட்டியது
வாழும் வரையில்!

காவியக் கவிஞரின்
வாய் குதப்பும்
வெற்றிலைச் சிவப்பில் - அவர்
வெற்றி சிரிக்கும் :
நீறும் குங்குமமும் என்று
நிதமும் அவர்
நெற்றி சிரிக்கும்!
மோனை - கவியின் கரத்தில்
வீணை வாசிக்கும்!
அடுத்து எனக்கு
எந்தமிடமென்று
எதுகை யோசிக்கும்!
இதற்க்கிடை-- இயைபு
இவரால் எப்படி
இப்படி என்று
இடையிடையே பேசிக்கும்!
சீரும் அடியும்
நீரும் படியும் போல்
சீரும் சிறப்புமாய்
செம்மையாய் நேசிக்கும்!
சினிமா பாட்டிலும்
சிலேடை சிதறும் :
பல்லவியும் சரணமும்
பயந்துபோய் பதறும்!
திரைக்கு எழுதினாலும்
திரைப்படமான
இறைக்கு எழுதினாலும்
அதில் --
அருத்தம் விருத்தம்
அளவிட முடியாது!
ஆதிக்கம் குறையாது!
அய்யனின்
ஆற்றல் மூலத்தால்
அதிகம் பாதிக்கப்பட்டது
எழுதுகோலும் - அந்த
எழுத்தை வாங்கிய தாளும்!
போற்றுகிறேன் - என்
புண்ணியன் தாளும்!
அய்யா வாலி - ஒரு
அலாதி!
தலைக்கனம் இல்லாத
இலக்கியவாதி!
(இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}