- செ.சாந்தி சின்னத்தம்பி
தமிழுக்குக் கதியென்று
அமிழ்தாய் இருந்தவன் கம்பனன்றோ!
கம்பனெனும் மாநதியில் மூழ்குகின்றேன்
கையில் அள்ள அள்ள முத்துக்கள்
சந்தநயம் பொங்கி வரும் பாட்டினிலே
சலிப்பேதும் தோன்றாது அவன் ஏட்டினிலே
வீரமோ காதலோ ஏற்றிடுவான் உள்ளக் கூட்டினிலே
உயர்ந்தோங்கி நிற்கிறான் இந்நாட்டினிலே

அடி, தளை, சீர்களிலே
அழகு எதுகை மோனையிலேயே
சொற்களைப் படியாக்கிச்
சொல் நயமும் பொருள் நயமும்
சொக்க வைக்கும் கவிஞனவன்
பல நூற்றாண்டு கடந்தாலும்
பலரது தேடலிலே
பல் நோக்குக் காட்சியிலே
வியந்தே பார்க்க வைக்கும் விருட்சமவன்
இளைப்பாறலாம் இசை பாடலாம் பசியாறலாம்
கவி என்னும் கனி தந்திடும் கற்பகத்தரு அவன்.
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}