Tamil Poem: மருதாணி!

Su.tha Arivalagan
Jul 24, 2026,12:12 PM IST

- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்


அழகிய இதழ்களை ஆசையோடு பறித்து 


அம்மியில் வைத்து

மையாக அரைத்து 


உடன் பாக்கு வைத்து

மசித்து 


விரல் நுனிகளில் தொப்பி வைத்து 


உள்ளங்கையில் அழகிய வட்டங்கள் வரைந்து 


இரு கையில் இடச்சொல்லி 

தாயிடம் அடம்பிடித்து 


உறங்கும் வரையிலும்

ஆடாமல் பாதுகாத்து 




கனவிலும் செக்கச் சிவந்ததாய் நினைத்து 


அதிகாலை கண்விழித்து

அகம் மகிழ்ந்து 


கைகளின் சிவப்பில்

உள்ளம் பூரித்து 


குழந்தையில் ஆனந்தமாக மகிழ்ந்து குதித்து


நினைவுகள்

கனவுகளாய் குழந்தை பருவத்தை நினைவூட்டிச் சென்றது


(அமிர்தம் ரமேஷ், பெதப்பம்பட்டி, உடுமலை)