உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!

Su.tha Arivalagan
Oct 30, 2025,12:16 PM IST
- சிவ.ஆ.மலர்விழி ராஜா

சாயி உந்தன் முகம் பார்த்தேன்.....!
மெய் தான் சிலிர்த்ததய்யா .......!

உள்ளம் உருகி தேடி நின்றேன்.....
கண்ணீர் பெருகுதய்யா...

( உள்ளம் உருகி  தேடி)

உன்னை தேடி வரும் நேரம்....
எத்தனை சுமைகளய்யா....

அத்தனையும் உன் அருளாலே.....
பனிபோல் மறைந்ததய்யா......

(அத்தனையும் உன்)

உன்னை கண்டு மெய் மறந்தேன்.....
உலகமே நீதான் என்றுணர்ந்தேன்.....



உள்ளம் மகிழ்ந்து எனை
மறந்தேன்.....
உன் புகழ் பாடி நின்றேன்......

(உள்ளம் மகிழ்ந்து)

சாயி..... உனது 
தரிசனமே......
உள்ளமும் உன்னிடம்....
சேர்ந்திடுமே....

எத்தனை இடர் களைந்தாய் சாயி.......
என் வாழ்வினில் வசந்தம் தந்தாய்.......

(எத்தனை இடர் களைந்தாய் )

உன்னை நினைத்திடவே
சாயி உள்ளமும் மகிழுதய்யா......

உன் திருவடி தரிசனத்தில் உலகம் 
உன்னதமானதய்யா....
சாயி....
உன்னதமானதய்யா...

சாயி என அழைத்தால் வருகின்ற துன்பமும் நீங்கி விடும்......

சாயி .....சாயி .........
என அழைத்தால் 
வருகின்ற துன்பமும் நீங்கி விடும்.....

துவாரகமாயினிலே சாயி துனிதனில்  
காட்சி தந்தாய்......

உன்னை சரணடைந்தேன் சாயி.....
உன் புகழ் பாடி நின்றேன்.......

திருமுகம் தேடி வந்தேன் 
சாயி உன் மலரடி
சரணடைந்தேன்..... சாயி...

உன் மலரடி சரணடைந்தேன்...... சாயி...

மலரடி சரணடைந்தேன்.....!

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)