நெகிழ்வான மனம் கொண்டு உனதன்பை பரிசென்று..... மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா!

Su.tha Arivalagan
Nov 13, 2025,02:11 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


அன்பென்ற மனம் படைத்தாய் .....

அழகாக உருவெடுத்தாய்....

கருணையே வடிவான இறைவா .....

உனை  காணும் ஆசை தான் குறைவா.....

உனை   காணும் ஆசை தான் குறைவா .....


உன் திருப்பாதம் நான் கண்டு 

தினம் தினமும் போற்றுகிறேன்.....

கண் மலர்ந்து .....

பார்க்கையிலே இறைவா.....

உனை நானும் காண்பதுவும் கனவா....

உன்னை நானும் காண்பதுவும் கனவா.....




புவி மீது வாழ்ந்து நீயும் புண்ணியங்கள் .....

சேர்த்து வைத்தாய் நலிந்த மனம் .....

தேடுகின்ற இறைவா.....

உனதன்பை மீண்டும் நீ தரவா......

உனதன்பை மீண்டும் நீ தரவா .....


உன்னை காண ஏங்கி நின்றேன் ....

உறவாக தேடுகின்றேன்....

மனம் என்ற கோயிலிலே இறைவா .....

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்....


சாயி வா....!

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்

சாயி வா ......!


நெகிழ்வான மனம் கொண்டு

உனதன்பை பரிசென்று.....

மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா.....

கனிவோடு உன் அருளை தரவா .....!

கனிவோடு உன் அருளை தரவா....!


நினைக்கின்ற நேரமெல்லாம் .....

தந்தை என காட்சி தந்தாய் 

தயவோடு வர வேண்டும் இறைவா...

எனக்கென்று யாரும் இல்லை உறவா...!

எனக்கென்று யாரும் இல்லை உறவா .....!


வருகின்ற காலமெல்லாம் வயதாகி போகிறதே....

உனைத்தேடி நானும் வர இறைவா.....

உன் அருளை இனிதாக தரவா.....!

வருகின்ற காலம் எல்லாம் வயதாகி போகிறதே..... இறைவா ....!

கனிவோடு உன் அருளை தரவா .....!

சாயி கனிவோடு  உன்னருளை தரவா ....!


சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)