பைந்தமிழே பயிற்று மொழி...!
- அ. வென்சி ராஜ்
கன்னித் தமிழே....பைந்தமிழே...
காலமெல்லாம் உன்னை வளர்த்து..
நாங்கள் வாழவும்...வளரவும்....
வரம் தருவாயே...
வையம் போற்ற வாழ்வாங்கு வாழும் உன்னைப் போல்....
உன்னை வளர்க்க யாம் வளர்ந்து....
உலகில் ஒளியேற்ற வரம் தருவாயே...
அழகியே... அறிவே....
எம் அன்னைத் தமிழே....
உம் வியத்தகு வளர்ச்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்..
சங்கத்தமிழே...
சிந்தை உருகி வணங்குகிறேன்....
கன்னியே ...அமுதே..
தஞ்சையிலும் மதுரையிலும் சங்கம் வைத்து வளர்ந்து நிற்கும் சங்கத்தமிழே....
முத்தமிழே... முக்கனிச்சுவையே....
வாழ்த்துகிறேன்...
தொல்காப்பியம் போற்றும் தீந்தமிழே. ...
வள்ளுவம் வளர்த்த வளர்பிறையே...
தேனினும் இனியது உன் சுவையே....
வான் போற்ற வளர்ந்திருக்கும் வளர்தமிழே...
செவிக்கு இனியவளே....
சிந்தைக்கு புதியவளே....
தேன் ததும்பும் இனிய சொல்லெடுத்து...
பூ மாலை தொடுத்து...
உனை வீழ்த்த நினைத்தார் முன்...
வீழ்வேனென்று நினைத்தாயோ என ஓங்கி உயர்ந்து நிற்கும் உயர் தமிழே...
தாய்த்தமிழே...
என்றும் கன்னியே...
மூவேந்தர்களும் சங்கம் வைத்து சீராட்டி பாராட்டி வளர்த்த பேரழகே...
என் தாய் தமிழே..
பைந்தமிழே....
உனையே பயிற்று மொழியாய் கொள்ள எம் உள்ளம் ஆவல் கொண்டதே...
அந்த ஆவல் நிறைவேற்ற அடியெடுத்து வைப்போமே...
அனைத்து அறிவையும் அழகாய் கற்றிட
உன்னில் சொல் தேடி நிற்கின்றேன்...
தமிழன்னையே...
ஆசீர்வதியும் என்னையே....!
(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)