அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

Oct 24, 2025,05:05 PM IST

- பா.சுமதி சரவணன்


என்னுயிர் தமிழே 

எனக்கு அம்மா முதலில் அறிமுகம் என்றால் 

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே 

என்னை உனக்கு தருவேன் தமிழே

ஏனெனில் நீ என் உயிர் மூச்சு. 

என் உயிர் தமிழே.

நீ நீ நீ என் அறிவு பசிக்கு  விருந்து.

நீ என் உள்ள கிடக்கைக்கு மருந்து.

நீ என் உயிர் தமிழே.

தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொல்வார்கள்.

அமுதம் என்றால் வாழ வைக்கும் தன்மையை கொண்டது என்பது பொருள்

அதே போல் தான் என் தமிழும் 




என் உயிர் தமிழும் என்றும் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

இனி தமிழ் மெல்ல சாகும் என்றார் பாரதி .

உனக்கு தமிழுக்கு அழிவு  கிடையாது என்பதை தான் அப்படி உரைத்தார் அவர்.

இந்த உலகம்  உலகம் இருக்கும் வரை நீ இளமையோடு இருப்பாய் என் உயிர் தமிழே.

ஏனென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. 

என்னுயிர் தமிழே..

கல் வந்துவிட்டது அது நொறுங்கி தான் மண் வர வேண்டும் 

அதற்கு முன்னேயே  தமிழ் வந்துவிட்டது.

அத்தகைய சிறப்பு பெற்ற என் உயிர் தமிழே ...

என்றும் நிலைத்து நின்று வாழ்வாய். வாழ வைப்பாய்...

வளர்க தமிழ்

வாழ்க தமிழ்


கவிதை வடித்த பா.சுமதி சரவணன்.M.sc( yoga )NIIT, சென்னை. திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ்ச் சேவை புரிந்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்