டெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவித்தது நீங்கள்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் கொடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
நீட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். இளைஞர்களின் நலனை விட பெரிது எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி டிவீட் போட்டுள்ளார். இதற்கு ராகுல் காந்தி பதில் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்தவர் நீங்கள் தான்.
நமது கல்வி முறை முழுமையாகக் கைப்பற்றப்படுவதற்கும், சீரழிக்கப்படுவதற்கும் நீங்கள் அனுமதித்து ஊக்கமளித்தீர்கள் - மேலும் அதற்குப் பொறுப்பான அனைவரையும் பாதுகாத்தீர்கள்.
மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை:
1. தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று ராகுல் காந்தி தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}