- பாரதிராஜன்
இருக்கும் பணியிலே மிகமிகச் சிறந்தது ஆசிரியப்பணி. தன் மாணவன் மேலே மேலே உயர்ந்து செல்வதைப் பார்த்துப் பெருமைப்படுபவர் ஆசிரியர்கள்தான்.
உதாரணமாக மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.சங்கள் தயா சர்மா அவர்கள் அரபு நாட்டுக்கு சென்ற போது அந்த நாட்டு மன்னரே நம் குடியரசுத் தலைவரை வரவேற்றுக் கெளரவித்தார். அந்த மாதிரியான நடைமுறை அரபு நாடுகளில் கிடையாது.
அந்த மன்னர் அம்மாதிரி செய்ததற்கு காரணம் நம் குடியரசுத் தலைவர் ஆசிரியப் பணி செய்த போது மன்னர் அந்த கல்லூரி மாணவர்ய எனவே தம் ஆசிரியரை கெளரவித்தார்.
பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் ஆகிய நான் வாலாஜாபாத் என்ற டவுனில் வா.த.மாசிலாமணி முதலியார் பள்ளிக்கூடத்தில் தான் படித்தேன். 7ஆம் வகுப்பு படித்த சமயத்தில் எங்களுடைய வகுப்பு ஆங்கில ஆசிரியராக இருந்த திரு கோவிந்தராஜன் அவர்கள் ஆங்கில பாடம் எடுக்கும் வழியே தனி ஒரு நாடக நடிகர்போல நடித்த படியே சொல்லித்தருவார். மனதில் நன்கு படியும். கண்ணை உருட்டி பார்த்தால் பசங்க உச்சா போய்டுவாங்க.

இந்த போட்டோவில் நடுவில் சால்வையுடன் இருப்பவரே அவர். 22/5/22ல் அவர் வீட்டில் சந்தித்தேன். அவரின் இடது பக்கம் இருப்பது அப்பள்ளியின் ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர் குபேரன் அவர்கள்.
வீட்டில் அவரைப் பார்த்து பேசியது அவருக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. எங்கள் மூன்று பேருக்கும் அவரே டீ போட்டுக்கொடுத்தார். மறக்க முடியாத ஆசிரியர்.
2024ஆசிரியர் தினத்தன்று வயது முதிர்வின் காரணமாக காலமானார்.
ஆசிரியர்களை கொண்டாடுவோம்.. அவர்களது ஆசி இன்று நாம் இருக்கும் நிலைக்குக் காரணம்.
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}