கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
- கலைவாணி ராமு, புதுச்சேரி
அண்ட பிரமான்ட நாயகியின் அருளோடு
பிறந்த பெண்ணெனும் சக்தியாகிய நாம் பெருமைக்கு உரியவர்கள்
பேரொளியாய் மின்னவும் செய்து கொண்டிருக்கிறோம்.
பெரும் தவம் புரிந்தவருக்கே பெண் பிள்ளைகள் பிறக்கும்.
பெண்கள் அந்த சக்தியின் மருவுருவம்....
ஆண்கள் சிங்கம் என்றால்
பெண்கள் அந்த சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் ஆதிபராசக்தி ஆவாள்!
கோவிலின் சிறப்பு விக்ரகம்
வீட்டின் சிறப்பு பெண்ணென்னும் சக்தியாகிய நாம் தான்
அவள் பல கரங்கள் கொண்ட பராசக்தி ஆவாள்
ஒரே நேரத்தல் பலப்பலப் பனிகளை செய்யும் ஆற்றல் படைத்தவள்
ஆணை விட அதீத பலம் பெற்றவள் பெண்...
நம்மையெல்லாம் ஆட்கொள்பவளும் அவள் தான்
ஆளப்பிறந்தவளும் அவள்தான்.
துர்க்கையாய், மகிஷனை ஆட்கொண்டாள்,
கல்வியில் சரஸ்வதியால்
செல்வத்தில் லக்ஷ்மியாய்,
வீரத்தில் மகா காளியாய்
மதுரையை ஆளப்பிறந்தவள்
நம் மதுரை மீணாட்சி,
காஞ்சியை ஆளப்பிறந்தவள்
நம் காமாட்சி,
காசியை ஆண்டு கொண்டு வருபவள் விசாலாட்சி
இச்சா சக்தியாய், கிரியா சக்தியாய்
ஞான சக்தியாய் இன்றும் நம்மை ஆளப்பிறந்தவள்
நம் அண்னையரே!
அன்பு காட்டினால்
அமைதியாக இருப்பாள்
அதிகாரத்தின் முன் ஆர்ப்பரிப்பாள்,
மகிஷனை வதைத்த மகிஷா சூர மர்த்தினியை
அசுரன் பெண்தானே என்று நினைத்ததனால் அழிந்தான்.
அன்னையின் அருளோடு பிறந்த நாமோ
இந்த கால அரக்கரான
வரதட்சனை கொடுமை, பாலியல் கொடுமைகளை
அழித்து முன்னேறி வந்துகொண்டிருக்கிறோம்.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற
பாரதியின் கூற்றை மெய்பட செய்து வருகிறோம்.
கரண்டி பிடித்த கரங்கள்
கார் ஓட்டவும்
ஒரு படி மேலே விமானம் ஓட்டவும் செய்கிறோம் .
எங்களை பெண்ணென் நினைத்தாயோ.
பகாசூரனை அழித்த பரமேஸ்வரியாய்
கன்னியாகுமாரியில் வாழ்பவளின் அருளோடு
மலரைப் போல மென்மையாகவும் இருப்போம்
அநீதி நடந்தால் புயலாகவும் மாறுவோம்.
பாஞ்சாலியை பெண் என்று நினைத்து
ஏளனம் செய்த கௌரவ கூட்டம் அடியோடு அழிந்தது.
பெண்களாய் இருப்பதை பெருமிதம் கொள்வோம்
கருவை சுமக்கும் தாய்மை என்னும் பெருமை
அதுவே எங்களின் தனித்துவம்