தேனிசை வானில் கலந்தது!
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
தேனிசைத் தென்றல்
ராஜாவும் அல்லாத
ரகுமானும் அல்லாத
இன்னிசை பாட்டை
இதயத்தில் ஏற்றியவர்
கானா பாடல்களின்
கதாநாயகன்
ஏனோ இன்று
எல்லோரையும் மறந்தார்
நெஞ்சு வலிக்கு - ஒரு
நெஞ்சு வலி வர
என்ன படிக்க வேண்டும்?
எந்த டாக்டரை
பிடிக்க வேண்டும்?
தெரிந்தால் சொல்லுங்கள்
தேடிச் செல்லலாம்
இல்லையென்றால்
எமன் உலகை
நாடிச் செல்லலாம்!
எமனே உனக்கு
இசையை எடுத்துச் செல்ல
அவ்வளவு நசையா?
இசைமேல் உனக்கு
அவ்வளவு பசையா?
ஜெயிலர் 2 வரை
சூப்பர் ஸ்டாருக்கு
உன் இன்ரோதான்!
அது
இன்றும் என்றும்
உயிர் இசை ஊட்டும்!
நீ காலம் சென்றாலும்
காற்றில் அலைவாய்
நீ இல்லை என்றாலும்
இசையில் வாழ்வாய்!
இன்று
என்னோடு சேர்ந்து
என் play list களும்
அழுது புரள்கிறது!
'சூராதி சூரன் நீ
உன்னை வெல்ல யாரு!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)