இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

Oct 17, 2026,12:49 PM IST

சென்னை: தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜாவும், தேனிசைத் தென்றல் தேவாவும் கடைசி வரை சந்திக்க முடியாமல்  போனது இசை ரசிகர்களுக்கு பெருத்த வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இருவருமே ஆளுக்கு ஒரு துருவமாக இருந்தாலும் கூட அவர்களின் இசைக்கு ரசிகர்கள் பெரும் அடிமையாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள். இருவருமே தனித்துவம் கொண்டவர்கள். இருவருமே ஒரு கட்டத்தில் உறவினர்களும் ஆனார்கள். இளையராஜாவின் அண்ணன் மகனைத்தான், தேவாவின் மகள் திருமணம் செய்துள்ளார்.


இப்படி பல வகையிலும் இருவரும் நெருங்கி வந்தாலும் கூட இருவரும் நேரடியாக சந்தித்ததில்லை. இது இசைப் பிரியர்களுக்கு பெரும் உறுத்தலாகவே இருந்து வந்தது. இரு மேதைகளும் சந்திக்க வேண்டும். இருவரும் இணைந்து இசையமைக்க வேண்டும் என்றெல்லாம் கூட பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவேயில்லை.




இந்த நிலையில்தான் இருவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சிச் செய்தியாக வந்து சேர்ந்தது தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பான செய்தி. 


சென்னை வடபழனியில் (கமலா தியேட்டர் அருகே) தனக்குச் சொந்தமான இடத்தில், சுமார் ரூ. 30 கோடி மதிப்பீட்டில், 10 மாடிகளைக் கொண்ட புதிய நவீன வளாகத்தைக் கட்ட திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. வடபழனியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் இந்த 10 மாடி அதிநவீன வளாகம் அமையவுள்ளது. 


இந்த பிரம்மாண்டக் கட்டடத்தை கட்டி முடிக்கத் தேவையான ரூ. 30 கோடி நிதியைத் திரட்டுவதற்காக, சங்கம் ஒரு பிரம்மாண்டமான உலகளாவிய இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ் திரை இசையின் தூண்களாக விளங்கும் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகிய ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒன்றிணைய திட்டமிட்டிருந்தனர்.


சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய உலகத்தரம் வாய்ந்த நகரங்களில் இந்த நிதி திரட்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறவுள்ளன. இக்கச்சேரிகளுக்கு இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களது முழு சம்மதத்தைத் தெரிவித்திருந்தனர். இதன் மூலம் இளையராஜாவும், தேவாவும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.


ஒரே காலகட்டத்தில் கோலிவுட்டைத் தங்களது இசையால் ஆட்டிப்படைத்த இரு பெரும் ஆளுமைகள், பொது மேடைகளிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இதற்கு முன்பு இப்படிச் சந்தித்ததில்லை. சங்கக் கட்டடம் என்ற ஒரு பொதுவான நல்நோக்கம், இந்த இரு இசை இமயங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அனைவரும் மகிழ்ந்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமலேயே போய் விட்டது இசை ரசிகர்களை அழ வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குந்திதேவி.. சோதனைகளையும் தியாகங்களையும் தாங்கி நின்ற தாயின் கதை!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி: தொடரும் தீவிர சிகிச்சை

அதிகம் பார்க்கும் செய்திகள்