மனிதம் எங்கே?
மனிதம் எங்கே?
ஆறறிவு கொண்ட மனிதனே....
மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்...
குணம் கொண்ட நீ குன்றேற வேண்டாமோ?
குணத்தைத் தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!
தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா?
இந்த தரணி ஈடாகுமா?
தன் இரத்தத்தை.
ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி
வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!!
உன்னை பெற்றது என் பாவமா?
புவி சிறக்க வளர்த்தது தந்தை பாவமா?
முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே
மூச்சடைக்க வைத்தாய் நீ..
வயதான காலத்தில் வாழ்வுக்கு போராட வைத்தாய்..
உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....
உன் அன்பான மகன் உன்னை
பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!!
உயிர் பிழைத்துக்கொள்....!
(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)