அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

Su.tha Arivalagan
Sep 24, 2026,10:56 AM IST

- அ. சுபலட்சுமி


அறிந்த பழமொழிகளும், அறியாக அர்த்தங்களும் வரிசையில் இன்று நாம் காணப் போவது..


"கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்"


ஆனால் உண்மையான பழமொழி என்னவென்றால்.. "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்" என்பதே ஆகும். 


நாயகன் என்பது [இங்கு கடவுளைக் குறிக்கிறது]. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சிலையை வெறும் கல்லாகப் பார்த்தால் அங்கே கடவுள் தெரிய மாட்டார். அதையே நீங்கள் கடவுளாகப் பார்த்தால் அங்கே கல் தெரியாது (தெய்வ பக்தனுக்கு சிலை கண்ணுக்குத் தெரியாது, கடவுள் மட்டுமே தெரிவார்). 


காலப்போக்கில் மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வந்தபோது, 'நாயகம்' என்ற சொல் மருவி [சுருங்கி 'நாய்' என்று மாறிவிட்டது]. இதனால் "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" என்ற தவறான வடிவம் பரவலாகிவிட்டது. 




காதில் அரைகுறையாக விழுவதை மட்டும் கேட்டு, பேசுவோர், எப்படியோ திாிபுபடுத்தி, அதற்கு ஓர் அர்த்தத்தையும் கொடுத்து விடுகின்றனர்..


கல் இருக்கும் போது நாயில்லை நாயிருக்கும் போது கல்லில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனை. நாய்களுக்கு எறிவதற்கென்று தெருவெல்லாம் கற்களையா போட்டு வைத்திருக்கிறார்கள்!


பழமொழிகள் திரிந்தாலும் அதற்கும் ஒரு காரணம் கற்பித்து விடுவது தமிழின் சிறப்பு.


(அ.சுபலட்சுமி M.Sc,M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)