- அ. சுபலட்சுமி
பழமொழி அதாவது Proverb என்பது மக்கள் தங்களது வாழ்வியல் அனுபவங்கள் மூலம் உணர்ந்த உண்மைகளை, தலைமுறை தலைமுறையாகச் சுருக்கமாகவும், தெளிவுடனும், அழகியலுடனும் கூறி வரும் பழமையான தொடர்களாகும்.
இது "பழமை + மொழி" எனப் பிரிந்து, "தொன்றுதொட்டுச் சொல்லப்பட்டு வரும் வார்த்தை" எனப் பொருள்படும். தொல்காப்பியம் பழமொழியை ‘முதுசொல்’ அல்லது ‘முதுமொழி’ என்று குறிப்பிடுகிறது.
அப்படிப்பட்ட பழமொழிகள் குறித்தும் அதன் உண்மையான அர்த்தம் குறித்தும் ஒரு தொடராக நமக்கு விளக்க வருகிறார் ஆசிரியர் அ. சுபலட்சுமி.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - இதுதான் நமக்குத் தெரிந்த பழமொழி.
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை - இதுதான் உண்மையான பழமொழி
விளக்கம்

"கழு".. இது ஒரு வகை மருத்துவ குணம் கொண்ட கோரைப்புல் ஆகும்.
முன்னோர்கள் இப்புல்லைக் கொண்டு பாய் தைத்தனர். அந்தப் கோரைப் பாயில் படுக்கும்போது கற்பூரத்தைப் போன்ற நறுமணம் (வாசனை) வரும். பூச்சிகளும் அருகில் அண்டாது.
"கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை" என்ற சொற்றொடர்தான், காலப்போக்கில் மருவி "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று மாறிப் போய் விட்டது.
இதனால் அறிவில்லாதவர்களுக்கு நல்லதன் அருமை தெரியாது என்ற தவறான பொருளில் இன்று இது பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இதற்கும் கழுதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இனிமேல் இதை சரியாக பயன்படுத்துவீங்க இல்லையா.. அடுத்த பழமொழியுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
(அ.சுபாலட்சுமி M.Sc,M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}