ஹோபோனோபோனோ.. எண்ணம் போல் வாழ்க்கை (5)
- அ.சுபாலட்சுமி
என்ன நண்பர்களே எதோ புது புது வார்த்தையை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அது என்ன என்பதை இப்போது கூறுகிறேன்.
ஹோபோனோபோனோ (Ho'oponopono) என்பது மன அமைதி, மன்னிப்பு மற்றும் உள்மனச் சுத்திகரிப்பிற்கான ஒரு பழமையான ஹவாய் (Hawaiian) வாழ்வியல் முறையாகும். "தவறைச் சரிசெய்வது" அல்லது "சரியான நிலைக்குக் கொண்டு வருவது" என்பது இதன் பொருளாகும்.
5 மந்திர வார்த்தைகள்:
நான் வருந்துகிறேன் (I am sorry)
தயவுசெய்து என்னை மன்னித்துவிடு (Please forgive me)
நன்றி (Thank you)
நான் உன்னை நேசிக்கிறேன் (I love you)
நான்(பிரபஞ்சம்) என்னை மன்னித்துவிட்டேன்(I forgive myself)
இந்த ஐந்து வார்த்தைகளையும் நாம் மனதார சொல்ல பிரபஞ்சம் நமக்கு நல்ல வழியை காட்டும்.
இரவு உறக்கமும் ஆழ்மனமும்:
நாம் இரவு தூங்கும் போது குணமாதல் விரைவாக நடக்கிறது.அதற்கு காரணம், அங்கு உங்கள் வெளிமனத்தின் குறுகீடு இல்லை. நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு மிக சிறப்பான விடைகள் கிடைக்கும்.
தூங்கும் போது நமது ஆன்மா நம் உயிர் நிலையுடன் இணைக்கப்பட்டு,கடவுளின் ஞானத்திலும் முன்னறிவிலும் பங்கேற்கிறது.
நமக்கு உறுதியாய் தேவைப்படும் செயல்களையோ அல்லது நம் மனதில் எழும் குழப்பத்திற்கு விடை தெரிய வேண்டும் எனில் இரவு உறங்கச் செல்லும்போது சரியான நடவடிக்கை வேண்டிப் பிராத்தித்தால்,உங்கள் ஆழ்மனத்தின் ஞானம் உங்களுக்கு அறிவுரை கூறி,உங்களைப் பாதுகாக்கும்.
நம் ஆழ்மனம் அனைத்து ஞானத்தையும் உள்ளடக்கியது.அதற்கு எல்லாம் தெரியும். அது அடிக்கடி உங்களுடன் பேசும்.இதை நாம் பல முறை அனுபவித்திருப்போம். ஆனால் நாம் அதை கண்டுகொள்ளாமல் கடப்போம் பிறகு விளைவை அனுபவிக்கும் போது நம் ஆழ்மனம் கூறியது நினைவிற்கு வரும். அப்படிதானே? அதனால் நாம் ஆழ்மனம் சொல்வதை செயல்படுத்துவோம்.
(தொடரும்)
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)