காட்சிப்படுத்திப் பாருங்க.. நினைத்தது நிச்சயம் நடக்கும்.. எண்ணம் போல் வாழ்க்கை (4)

Nov 25, 2026,04:50 PM IST

- அ.சுபாலட்சுமி


நமக்கு ஓர் விஷயம் நிச்சயமாக கிடைக்க  வேண்டுமென்றால் அதை நாம் ஏற்கனவே அடைந்தது போல் காட்சிபடுத்த வேண்டும். காட்சிபடுத்துதல் என்பது நமக்கு தேவையானவற்றை ஏற்கனவே அடைந்துவிட்டால் என்ன நிகலும் என்பதை நம் கண்முன்னே ஓர் நிஜ படமாக ,அதை உணர்ந்து பார்க்க வேண்டும். 


ஒரு 3D படம் பார்ப்பது போல. அவ்வாறு பார்க்கப்படும் விஷயத்தை நம் முழுமையாக எந்த தேவையற்ற கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.


நாம பிரபஞ்சத்திடம்  ஒரு விஷயத்தை கேட்குறதுக்கு முன்னால் அது நாள் வரை நமக்கு நடந்த நல்ல விஷயங்களை நினைத்து பார்க்கனும். உங்களுக்கு புரியுர மாதிரி சொல்லனும்னா, நீங்க இரண்டு நண்பர்களுக்கு இரண்டு பரிசு வாங்குரீங்க. அத அவங்ககிட்ட கொடுக்குறீங்க. அதுல முதல் நண்பன் வாங்கிட்டு உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு போயிடறான்.


இரண்டாவது நண்பன் அந்த பரிசை வாங்கினதும் நன்றி சொல்லிட்டு அத பிரித்து பார்த்து அதோட அழகை ரசிச்சு மனசார நன்றி சொல்லுறான். அடுத்த முறை நீங்க யாருக்கு பரிசு வாங்கி கொடுப்பீங்க? 




இதுதான் நன்றியுனர்வு. இதேபோல தான் நீங்க உங்களுக்கு கிடைத்திருக்கும் பரிசுக்கு மனதார பிரபஞ்சத்துகிட்ட நன்றி சொல்லி பாருங்க. நிச்சயமா இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கும்.


இன்னோரு விஷயம் நீங்க கவனிச்சிருப்பீங்க. அதாவது நீங்க ஒரு விஷயத்தை பற்றி நினைக்கும் போது அது தொடர்பான ஏதோ ஒரு சில விஷயங்கள் உங்க கண்ணுல தென்படும். அப்போ நீங்க என்ன நினைப்பீங்க? நானே அது கிடைக்கல்லைனு தான் கவலை பட்டுகிட்டு இருக்கேன் அதுவே என் கண்ணுல பட்டு என்ன கடுப்பேத்துதே னு நினைப்பீங்க, சரிதானே?


ஆனா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? இது ,உங்களுக்கு நிச்சயமா அது வேண்டுமா னு பிரபஞ்சம் உங்ககிட்ட கேட்கிற கேள்வி. அதனால் இனிமேல் அந்த மாதிரி பார்த்தா ''ஆமாம் எனக்கு வேண்டும் இல்லை எனக்கு வேண்டாம்'' என்று பதில் சொல்லுங்க. அதுக்கான பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 


(தொடரும்)


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்