இடியாப்பம்!

Nov 25, 2026,04:41 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


சிக்கல் சிங்காரப் பணியாரம்!


எத்தோடும் இணைந்து

போகும் குணம்.


குர்மாவா, சரிதான், ஒரு பிடிப் பிடிச்சிடுவோம்!




தேங்காய்ப் பால் போதும்

அதுவே அமிர்தம்.


தக்காளி சட்னி

சட்டுனு உள்ளே

தள்ளி விடலாம்.


வரும் மருமகள்

இடியாப்பம் போல் 

இருக்கணும்!


மாமியார் ஆசை

இது நிறைவேறுமா?


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்