- "சிந்தனைச் செல்வி" ரா. புஷ்பவல்லி
கூடாமையால் பெறுவது துன்பமே. இன்றைய குடும்பம் என்பது முறிந்த கிளை மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது போல் உள்ளது. சேர்ந்து வாழ்கிறோம் என்ற பெயரில் வீட்டில் தனித்தனியே, தனிமையில் வாழ்கிற கணவன்-மனைவி அதிகம். ஆரம்பத்தில் சின்னச் சின்னச் சண்டைகளைப் பெரிதாக்கி, அதனால் தாம்பத்தியமே முதலில் அடிபட்டு, அதுவே நிரந்தரமாகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே.
ஆண்களின் உழைப்பும் பாதுகாப்பும் குடும்பங்களுக்குத் தேவை; ஆனால், அவனோ மனைவி மற்றும் குழந்தைகளால் ஒதுக்கி வைக்கப்படுகிறான். எத்தனையோ வீடுகளில் வாய் இருந்தும் பேச ஊமைகளாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
பெண்களின் மனநிலை தற்போது 'மாற்றம்' என்ற பெயரில் அழிவுக்கான மாற்றமாக இருக்கிறது. இதற்குச் சாட்சி இன்றைய ஊடகங்களில் (குறிப்பாக டிவி தொடர்களில்) வெளிப்படும் பெண்களின் வார்த்தைகள். சினிமா என்ற மோகத்தால் ஏற்படும் இந்த மாற்றம் சமுதாயத்துக்கு நல்லதல்ல.
உடலால் ஆண்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆண்களை ஆட்டிப்படைத்து நிம்மதியை இழக்கச் செய்கின்றனர். குடும்பச் சிதைவுக்குப் பெண்களின் பங்கும் பெருமளவு இருக்கிறது; வாழ்க்கையையும் போட்டியாக நினைக்கும் மனநிலை உருவாகியுள்ளது.

எத்தனையோ ஆண்கள் தனிமையில் வாழ்கின்றனர். குடும்பம் இருந்தும் இல்லாத வாழ்வு; குடும்பத்தை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் தன்னைத்தானே ஏதோ ஒரு வகையில் அழித்துக் கொள்கின்ற ஆண்களும் உண்டு.
அழிவுக்கு காரணமாக அமைந்த கைபேசியால் சீரழிந்த குடும்பங்கள் அதிகம். அது உறவுகளைக் காட்டிக் கொடுக்கும் கருவியாக மாறிவிட்டது. பார்ப்பது ஆண்கள், பதிவிடுவது பெண்கள்தான்; கைபேசியோடு கலந்துறவாடி இதுதான் வாழ்க்கை என்று நினைக்கும் இளைய சமுதாயம் உருவாகியுள்ளது.
பிரிவுதான் நல்லது என்று பிரிய நினைத்தாலும், சில பெண்கள் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கணவன் மீது சுமத்தப்படும் பாலியல் வன்முறை. இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இல்லாத வன்முறை, இன்று மட்டும் பெண்களுக்கு ஏன் தெரிகிறது?
ஆணுக்கு ஆசை இருக்கிறது; தாம்பத்தியம் தேவைப்படுகிறது. உணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவான இயல்புதானே. பெண்கள் அதை மறைத்துப் பழகிக் கொண்டனர். எத்தனையோ ஆண்கள் நல்ல இல்லறம் அமையாமல் தனிமையில் வாடுகின்றனர். இருந்தும் இல்லாத இந்தக் கொடுமை ஏனோ வெளியே தெரிவதில்லை; தவறான பார்வையே ஆண்கள் மேல் விழுகிறது. பெண்கள் சுதந்திரம், சமுதாயப் புரட்சி, சமத்துவம் என்பதைத் தவறாகப் பயன்படுத்திப் 'பேரழிவுக்கு' வழிவகை செய்கின்றனர்.
சேர்ந்து வாழ முடியாமல் போனால் பிரிவு நல்லதுதானே; அதை ஏன் கொடுக்கத் தயங்குகிறார்கள்? இருவரில் ஒருவர் வெறுப்பு அடையும் போது மாற்று ஏன் தேடுகிறார்கள்? சில உறவுகள் ஆறுதலுக்காகவும் இருக்கின்றன; அதையும் தவறு என்று சொல்ல முடியாது. பெண்களைத் தவறு சொல்வதை விட, இந்தக் கவர்ச்சியும் சினிமா, ஊடகங்களும்தான் மனங்களை மாற்றுகின்றன.
குடும்பச் சூழலைப் பார்த்து இன்றைய குழந்தைகளும் பருவம் எய்தியவர்களும் வாழ்க்கையை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். வந்து செல்வதல்ல வாழ்க்கை; நாம் எதை விதைத்துச் செல்கிறோம் என்பதே வாழ்க்கை. சிந்திப்பீர்! கூடுதல் காமத்தில் இன்பம் உண்டு; அதைக் காட்டிலும் கூடி வாழ்வதே பேரின்பம்.
(ரா. புஷ்பவல்லி. சேலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி, தையல் கலை நிபுணர், கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் மற்றும் சிற்ப ரசனையாளர்)
'கூடி முயங்கப் பெறின்'.. நல்லறமாகும்!
தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (19)
விலைமதிப்பற்றது!
புதன் சிந்தனை... எதிர்ப்பார்ப்பின்றி மலர்கின்ற உறவே அழகான புரிதலின் உச்சம்
சமையல் With ஸ்வர்ணா.. கோதுமை தோசை & கொங்குநாட்டு நெல்லி தக்காளி தொக்கு!
காமாட்சியும் அனிதாவும்.. ஒரு நிமிடக் கதை (65)
இனியும் உலக அழகி போட்டி எங்கும் நடக்காது!!
மொழி நமக்கு என்ன செய்யும்?
மலக்குழி மரணங்கள்.. தொழில்நுட்ப யுகத்திலும் தொடரும் அவலம் - இதுக்கு என்ட் கார்டே இல்லையா!
{{comments.comment}}