மொழி நமக்கு என்ன செய்யும்?

Nov 25, 2026,10:53 AM IST

- "நாவரசி" ந.வனிதா


மொழி பேசி வாழும் மனிதர்கள் மத்தியில் தமிழ் மொழி பேசி வாழ்வதில் பெருமைப்படுகிறேன் தமிழே என்று தனது உரையை தொடங்குவார் எனது கவி உலக தோழமை ஒருவர் .அவர் கூறும் போது அதில் உள்ள பொருளை எண்ணி அவர் கூறுவதை வியந்து வியந்து கேட்டு மகிழ்ந்து இருக்கின்றேன் 


செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று அறுசுவையை ஐம்புலனால் தின்னும் வித்தையை கற்றுக் கொடுத்தான் மரபுக் கவிதை ஆசான் பாரதியார் .


இவள் என்று தோன்றியவள் என்று உணராத இயல்பினை கொண்டவள் என்று வியந்து போற்றும் செழுந்தமிழை பற்றி இன்று உங்களுடன் நான் 


ஆம் இந்த மொழி என்ன செய்யும் நம்மை? நாம் ஏன் மொழியை கொண்டாட வேண்டும்? இம்மொழி நம் மனதுக்கு அத்தனை நெருக்கமானது எப்படி? இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் என்னதான் சொல்ல விளைகிறார்கள் என்பதை சிறிதளவு பார்க்கலாமா ....






சைகை மொழியிலிருந்து ஒலி வடிவம் ,அதிலிருந்து எழுத்து வடிவம் பெற பன்னெடுங்காலம் ஆயிற்று. இதம் பதமாக இருப்பதால்தான் சொல்லுக்கு பதம் என்று பெயரிட்டார்களா? 


ஒரு சொல், நம்மை பூக்க செய்கிறது ஒரு சொல் நம்மை மகிழ செய்கிறது  ஒரு  சொல் நம்மை இயக்குகிறது  ஒரு சொல் நம்மை மலர செய்கிறது  ஒரு சொல் நம்மை அழ வைக்கிறது  ஒரு சொல் நம்மை ஆர்வமூட்டுகிறது  ஒரு சொல் நம்மை ஆவேசப்படுத்துகிறது ஒரு சொல் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இப்படி எழுத்துக்கள்.... ஒன்று சேர்ந்து நம்மை உணர்வுகளோடு போராடி உயிரோட்டமாக பேசுவதாகவும் அமைகிறது.. உணர்வுகளோடு மோதி உயிரோட்டமாக  வாழ வைக்கிறது.


எனக்குத் தெரிந்து, இது போல எனக்கு தெரிந்து இப்படி ஒரு மொழி இருக்க முடியுமா என்பது சந்தேகம் .மொழி நம் வாழ்வில் கண்டு  உணர்ந்தவையாகவே இருப்பதே அந்த அமைப்பின் சிறப்பாக நான் கருதுகிறேன் .


ஒரு கருத்தரங்கில் என் தோழமை ஒருவர் கூறியதாவது நம் வீட்டில் வளர்க்கும்  செல்லப்பிராணி பூனையை உற்று நோக்குங்கள். பூனையின் வால் நன்றாக வளைந்து சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அமைப்பை சற்று நினைவு கூறுங்கள் .அது பார்ப்பதற்கு வாலை வளைத்துக் கொண்டு இருப்பது போலவே பூ என்ற எழுத்தின் அமைப்பும் அமைந்திருப்பதில் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று கூறினார். அதனால் தான் என்னமோ அது நமக்கு மிகவும் நெருக்கமாகவே பயணிக்கிறது.


அதை ஒட்டி என்னுடைய சிந்தனையும், ஒருவேளை குதிரை நடக்கும்  போதும் ,ஓடும் போதும் குதித்து குதித்து மேல எழும்பி செல்வதால் தான் அதற்கு "குதி"ரை என வந்திருக்குமோ என்று தோன்றிற்று .….


ஒரு மொழியின் பெயரிலேயே நாடு அமைந்து இருப்பதும், ஒரு மொழியின் பெயரிலேயே மனிதர்களை அழைக்கும் பெயர் ஒட்டிக்கொண்டு வாழ்வதும் வேறு எந்த மொழியிலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நமது பெயருடன் மொழியை உறவாடி அழைக்கும் போது தமிழர்களின் மொழி பற்றினை அவர்களுக்கு தெரியாமலேயே எப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறப்பு "ழ" கர எழுத்து பீனியல் சுரப்பியை தூண்டிவிட்டு நீடித்த வாழ்நாளை உண்டு பண்ணுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள் .


இப்போது ஒரே ஒரு கேள்வி தான் உங்களிடம் எனக்கு .


இந்த மொழி உங்களுக்கு இதில் ஏதேனும் ஒன்றை செய்திருக்கும்... இதில்  உங்களுக்கு எதை செய்திருக்கிறது என்று நீங்களே வினவிக் கொள்ளுங்கள் .


நம் தாய்மொழி தமிழ் நமக்கு என்ன செய்திருக்கிறது...  அதாவது மொழி நமக்கு என்ன செய்கிறது ?


மொழி முதலில் நமக்கு எதுவும் செய்வதில்லை. 


நம்மை இயல்பாய் இருக்க பழக்குகிறது. தன்னிலை கெடாமல் நம்மை இருக்க பழக்குகிறது. 


மொழி சிந்தனை திறனை தூண்டி சுறுசுறுப்பாகுகிறது. 


மொழி எளிமையாக கற்பனையாற்றலைப் பெருக்குகிறது 


மொழி நம்மை சுதந்திரமாக சுவாசிக்க விட்டு நம் எண்ணங்களை வெளிப்படுத்தவும் பிறர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வழிவகை செய்கிறது 


மொழி படைப்புகளை பெருக்கி, படைப்பாளர்களை உருவாக்குகிறது. 


மொழி  தமிழ் இருந்து பிற மொழிகளுக்கும் (உதாரணமாக உலகப் பொதுமறை) பிற மொழிகளில் இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் பழக்குகிறது. 


மொழி ஆளுமைத் திறன் மிக்கவர்களாக நம்மை நமக்கு தெரியாமலேயே மாற்றுகிறது 


மொழி ஊன்றுகோலாக நம்மை தாங்கி பிடிக்கிறது. 


மொழி உயிருக்கு உத்வேகம் அளித்து உயிருடன் ஒன்றர கலந்து விடுகிறது ..


இப்போது கூறுங்கள் 


மொழி நமக்கு /நம்மை என்ன செய்யும் ? என்ன செய்கிறது 

மொழி நமக்கு எல்லாம் செய்யும் அல்லது செய்திருக்கும் .…


எனவே மொழியை விழியாக்கி பேரொளி ஆக்குவோம், வாருங்கள்!


வாழ்க தமிழ் வளர்க தமிழ்


(கவிஞர் ந.வனிதா, M.Sc.,(Maths) B.Ed.,M A.,(Economics). கவிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர், இசைச் சுவைஞர் என பன்முகம் கொண்டவர். சேலம் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மொழி நமக்கு என்ன செய்யும்?

news

மலக்குழி மரணங்கள்.. தொழில்நுட்ப யுகத்திலும் தொடரும் அவலம் - இதுக்கு என்ட் கார்டே இல்லையா!

news

திருப்பரங்குன்றம் தீப திருவிழா: வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2026: மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

news

தென்தமிழ் தலையங்கம்: இனியும் விஜய் பொறுக்கக் கூடாது.. இரும்புக் கரத்துடன் கூடிய நடவடிக்கை தேவை!

news

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

news

திருப்பரங்குன்றம் மகாதீபத் திருவிழா: மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

news

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு எதிராக வழக்குப்பதிவு : வீட்டில் போலீஸ் குவிப்பு...கைதாகிறாரா?

news

பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்