- அ.சுபாலட்சுமி
நம் ஆழ்மனம் ஓர் இயந்திரம், நம் வெளிமனம் என்பது அதை துவக்கிவைக்கும் ஒரு பொத்தான். நீங்கள் பொத்தானை அழுத்தினால் தான் இயந்திரம் வேலை செய்யும். அதாவது, உங்கள் வெளிமனம் தான் உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை முடுக்கி விடுகிறது.
உங்கள் ஆழ்மனத்திற்கென்று தனியாக ஓர் மனம் உள்ளது. அது உங்கள் எண்ணத்தை ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பிரச்சனைக்கான விடை உங்கள் ஆழ்மனத்தில் உள்ளது. அதற்கு முதலில் உங்கள் கேள்விக்கான விடை உங்கள் ஆழ்மனதில் உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இப்போ நீங்க கேட்கலாம், அப்படீனா நான் என்ன செய்யனும்னு? உங்களுக்கு என்ன வேண்டும்னு முதலில் யோசியுங்க. அப்பறம் அதை பிரபஞ்சத்துகிட்ட கேளுங்க. அதுவும் நேர்மறை எண்ணத்தோட கேளுங்க. அதாவது ''எனக்கு கண்டிப்பா கிடைக்கும்'' னு நம்பிக்கையோட கேளுங்க. அனா அது இப்போவே வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது.
நேர்மறை எண்ணத்துடன் மற்றொரு முக்கிய தேவை நம்பிக்கை. ஓர் விண்ணப்பத்தை உங்கள் ஆழ்மனத்திடம் ஒப்படைத்த பிறகு அந்த விண்ணப்பம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை வேண்டும்.
அதாவது, ஓர் விவசாயி எப்படி ஒரு விதையை நிலத்தில் விதைத்துவிட்டு, வளர்ச்சி விதியில் விசுவாசத்துடன் இருப்பாரோ, அதே போல் நாமும் முழு விசுவாசத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் நம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
(தொடரும்)
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)
செந்தாமரை மலர்தாயே
வெளிமனம் மற்றும் ஆழ்மனம்.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
சிந்தனைச் சிதறல்.. மகிழ்ச்சி என்னும் மரத்திற்கு உலகோர் நீர் ஊற்றுவார்களா?
திருநெல்வேலியில் "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" துவக்கம்: வைரலாகும் புதிய இயக்கம்!
அடுப்பங்கரை வாசம்!
பேசும் கிளி!
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை விவகாரம்: அரசு தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
வசந்தம் வரவேற்கும் நட்பு!
திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையில் பேரணி,போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
{{comments.comment}}