- அ.சுபாலட்சுமி
பிரபஞ்சம் என்றால் என்ன? நாம் வாழும் வாழ்க்கையில் நம்மை சுற்றி உள்ள அனைத்தும் அனுக்களால் உருவாக்கபட்டவை என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
''கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'' என்பது போல அனுக்கள் சிறியவையாக இருந்தாலும் அதன் சக்தி மிக பெரியது. ஒவ்வொரு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களும் அனுகளால் ஆனவை. அனைத்தும் சேர்ந்ததுவே இந்த பிரபஞ்சம்.
உங்களுக்கு புரியும்படி சொல்லனும்னா நம்ம அம்மா அப்பா மாதிரி இந்த பிரபஞ்சமும் நாம் கேட்கும் அனைத்தையும் நமக்கு தர தயாராக இருக்கிறது. அதே மாதிரி அது நமக்கு நல்லதானு பார்த்து தான் கொடுக்கும்.
ஒரு நெருப்ப பார்த்து ஒரு குழந்தை அது பக்கத்துல போகும் போது எப்படி அம்மா அல்லது அப்பா உடனே அந்த குழந்தையை போய் தூக்குறாங்களோ அப்படி தான் இந்த பிரபஞ்சமும் நம்மகிட்ட நடந்து கொள்ளும்.
ஈர்ப்பு சக்தியின் விதி:

''நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்'','' ஒற்றவை ஒற்றவற்றை ஈர்க்கும்''. இந்த வார்த்தைகளை பற்றி யோசிச்சு பார்த்திருக்கிறீங்களா? நீங்க ஒரு விழாவிற்கு போறீங்கனு வச்சுகிவோம், அங்க பலர் இருப்பாங்க. ஆனால் நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களை தான தேடுவீங்க? அதே போல தான் இந்த பிரபஞ்சத்துல எல்லாமே இருக்கு. ஆனா நம்ம நினைக்கிறதை தான் நம்ம ஈர்க்கிறோம்.
இப்ப உங்களுக்குள்ள ஒரு சந்தேகம் வரும். அதாவது நான் எனக்கு வேணும்கிறத கேட்டாலும் ஏன் கிடைக்கவில்லை? இதுக்கு பதில் நான் ஏற்கனவே சொன்னது போல சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மை. கொஞ்சம் யோசிச்சு பருங்களேன், நீங்க ஒரு விஷயத்தை பிரபஞ்சத்துகிட்ட (கடவுள்) கேட்கிறீங்க. ஆனா நீங்க அது கிடைக்கிறதுக்கு முன்னாடியே அது எப்ப நடக்கும், எப்படி நடக்கும்னு யோசிச்சிருப்பீங்க. அது தான் சந்தேகம்.
ஆனா நம்ம மனித குணம் தேவையில்லாததை நடக்கும்னு நினைக்கும். ஆனா நமக்கு தேவையானத எப்படி நடக்கும்னு சந்தேகப்படும். அதனால தான் அந்த தேவையில்லாத விஷயம் நமக்கு நடக்குது. நான் சொல்லுறது சரி தானே?
இப்போது உங்களுக்கு நான் சொல்லவருவது புரியும்னு நம்புறேன். அதுதாங்க ''எண்ணம் போல் வாழ்க்கை''.
(தொடரும்)
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)
பிரபஞ்சம் என்றால் என்ன.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)
கைப்பேசியில் கரைகிறது மனமே?
தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (17)கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
மனிதநேயம்
சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!
மூன்று சக்கர வண்டி.. ஒரு நிமிடக் கதை (62)
அவளின் நேசம்!
{{comments.comment}}