- புலவர் ப. ஈஸ்வரநாதன், சென்னை
விளம்பர மோகங்கள் வளர்ந்தே நிக்குதே
தொலைபேசியும் தொல்லையாய் கையில் சிரிக்குதே
பொய்யான ஆதரவிலே புகழிடம் தேடுதே
பொங்கி வழியும் புன்னகையும் பொய்யானதே
நிழற்படம் எடுப்பதே நித்தமும் பொழப்பானதே
கைபேசியின் கவர்ச்சியில் அத்தனையும்
அடங்கியதே...
-
கலியுகம் மாற்றிட களத்தில் போராடிடு
ஏழ்மையை மறைக்கும் மாயையும் போக்கிடு
வறுமையில் குடும்பமும வாடியே வாழுதே
வீதியில் வந்தே பொழப்பையும்
தேடுதே
மனிதநேயமோ மண்ணில் மறைந்தே போகுதே
ஏழையின் துன்பத்தில் விளம்பரமும் சுழலுதே....
-

உதவிகள் செய்வதை உயர்வாய் எண்ணாதே?....
சிந்தித்து செயல்படு சிறப்பாய் உதவிடு...
வாழும் வாழ்க்கையை பெரிதாய் நினைத்திடு
நிலமைகள் மாறிடும் நீயும் மறவாதே
வறுமையில் நீங்கிடவே வலிமையை தந்திடு
இல்லறம் சிறந்திடவே
இரக்கமனம் கொண்டிடு ...
-
இயலாமைப் போக்கிடவே
இன்றே விரைந்திடு
இன்முகம் காத்து துன்பம் துடைத்திடு
பாசாங்கு தவிர்த்து துயரம் போக்கிடு
உதவும் கரங்களாய் உண்மையாய் வாழ்ந்திடு ...
வாழும் வாழ்க்கையை வளமாய் மாற்றிடு
உலகமே மதித்திடவே உண்மையாய் உதவிடு
நல்லறம் போற்றியே
நாட்டினை உயர்த்திடு!
கைப்பேசியில் கரைகிறது மனமே?
தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (17)கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
மனிதநேயம்
சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!
மூன்று சக்கர வண்டி.. ஒரு நிமிடக் கதை (62)
அவளின் நேசம்!
தென்தமிழ் தலையங்கம்: பயங்கரவாதத்தின் நிழல் நீங்கிய காஷ்மீர் - வரலாற்றுச் சாதனை!
ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
{{comments.comment}}