சட்டென்று முன் தோன்றி.. பட்டென்று கேட்டான்.. காதல்!

Nov 19, 2026,04:07 PM IST

- "மலைமலர்" கி.மேனகா


சட்டென்று முன் தோன்றி....


பட்டென்று கேட்டான் 

என் இதயத்தை 

சம்மதமா என்று.....!


கண்களால் கற்பை களவாடியவன்.....

அவன் வருகையால் கறுப்பு கனவுகளும்....

வண்ணம் பூசிக் கொண்டது....


ஒவ்வொரு முறையும் காதல் இரகசியம் பேசிச் சென்றன....

என்னை கடந்து செல்லும் அவனது கண்கள்.....


விடுமுறை இல்லை

அவனைப் பற்றி நினைவுகளுக்கு...




உள்ளத்தில் அவனிருக்க

உறக்கமில்லை கண்களுக்கு.....


அவன் தீண்டல் தேடாத இரவுகளும் 

இழந்து போனது விடியலை.....


ஏனெனில் அவனருகில்

இல்லாத இரவும் நீண்டது......


என் இதயம் திருடியவன் அவன் என்று தெரிந்தும்

திருப்பி வாங்க முடியவில்லை 

என் இதயத்தை!


(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்