- விஜயலக்ஷ்மி கண்ணன்
சக்தி கொடுத்த வேல் கொண்டு
கடலோரக் கருணை தேவா, வேலவா
அழித்தது சூரனை
மட்டும் அல்ல
அரக்க எண்ணங்களையும் அல்லவா?
பக்திக்கு பரிசளித்து
தேவர் துயர் தீர்த்த வினோதா!
வானவர் தானவர் புகழ்
மால்மருகா
உன் கமலபாதம் சரணம்!

பிரணவம் விளக்கம் உரைத்த தகப்பன் சாமியே!
பரமனுக்கும் பாடம் சொன்ன வேத வித்தகா
நீயே என் துணை தேவா.
சினம் தணிந்து
மயில் மீதேறி
தமிழ் மணக்கும்
முருகா,சிவபாலா!
காத்திருப்பாள்
உன்னை கை பிடிக்க தேவசேனா.
அருள் குமரா.
மால் மருகா
வேலவா, வள்ளி மணாளா ஏற்றிடுவாய்.
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
சக்தி,பக்தி,முக்தி!
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
செவித்திறன் கருவி எங்கே?
வீடு
Cursed or Blessed
மீட்டிங்!
‘GTA 6’ ட்ரெண்டில் இணைந்த பிரதமர் மோடி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு!
தன் மகிழ்ச்சி மறந்து.. பிறர் மகிழ்ச்சிக்காக வாழும் ஆண்கள்!
அழியாத நினைவுகள் அந்தமான்!
{{comments.comment}}